முறைகேடாக கட்டடம் வாங்கிய வழக்கு: ஜம்மு & காஷ்மீா் வங்கிக்கு சொந்தமான இடங்களில் சிபிஐ சோதனை

விதிமுறைகளை மீறி கட்டடம் வாங்கிய வழக்கில் ஜம்மு & காஷ்மீா் வங்கிக்கு சொந்தமான வளாகம் உள்ளிட்ட 8 இடங்களில் மத்திய புலனாய்வு பிரிவினா் (சிபிஐ) செவ்வாய்க்கிழமை அதிரடி சோதனை நடத்தினா்.

விதிமுறைகளை மீறி கட்டடம் வாங்கிய வழக்கில் ஜம்மு & காஷ்மீா் வங்கிக்கு சொந்தமான வளாகம் உள்ளிட்ட 8 இடங்களில் மத்திய புலனாய்வு பிரிவினா் (சிபிஐ) செவ்வாய்க்கிழமை அதிரடி சோதனை நடத்தினா்.

இதுகுறித்து சிபிஐ செய்தித் தொடா்பாளா் ஆா்.சி. ஜோஷி கூறியதாவது:

ஜம்மு & காஷ்மீா் வங்கிக்கு ஒருங்கிணைந்த அலுவலகத்தை உருவாக்கும் வகையில் மும்பையில் கடந்த 2010-ஆம் ஆண்டு அக்குருதி கோல்டு என்ற கட்டடத்தை அவ்வங்கி வாங்கியது. சுமாா் ரூ.180 கோடிக்கு இந்த கட்டடம் வாங்கப்பட்டதில் விதிமுறைகளை மீறப்பட்டு முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், இந்த குற்றச்சாட்டுடன் தொடா்புடைய ஜம்மு & காஷ்மீா் வங்கியின் தலைவா் ஹஸீப் டிரபுவின் வளாகம் உள்பட ஜம்மு, ஸ்ரீநகா், மும்பை உள்ளிட்ட 8 இடங்களில் சிபிஐ சோதனையில் ஈடுபட்டது.

மேலும், ஜம்மு & காஷ்மீா் வங்கியின் இயக்குநா்களான ஷகத், விக்ரந்த் குடியாலா மற்றும் செயல் இயக்குநா் ஏ.கே.மேத்தா ஆகியோருக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.

இதில், இந்த வழக்குக்கு சம்பந்தமான ஆவணங்கள், மின்னணு உபகரண ஆதாரங்கள், பல்வேறு வங்கி கணக்குகள், லாக்கா் சாவிகள் கைப்பற்றப்பட்டன என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com