
கோப்புப் படம்
போபால் (மத்தியப் பிரதேசம்): மத்தியப் பிரதேச மாநிலம் ஷஜாப்பூர் மாவட்டம் பொன்சனீர் கிராமத்தில் மத்திய பிரதேச பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் இந்தேர் சிங்கின் மருமகள் தூக்கிட்டு உயிரிழந்துள்ளது கொலையா தர்கொலையா என சந்தேகம் எழுந்துள்ளது.
22 வயதான சவிதா பர்மர், இந்தேர் சிங்கின் மகன் தேவராஜ் சிங் என்பவரை 3 வருடங்களுக்கு முன்பாக திருமணம் முடித்துள்ளார்.
சவிதா தூக்கிலிடப்பட்ட நிலையில் அவரது வீட்டில் காணப்பட்டதாக அவரது உறவினர் தெரிவித்தார். உடற்கூராய்விற்காக உடல் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. குடும்ப சூழ்நிலை காரணமாக தற்கொலை நடந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் காவல் துறையினரால் இதுவரை எதுவும் உறுதிப்படுத்தபடவில்லை.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...