‘இலங்கைக்கு படைகள் அனுப்பப்படாது’: மத்திய அரசு உறுதி

இலங்கைக்கு படைகள் அனுப்பப்படாது என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

இலங்கைக்கு படைகள் அனுப்பப்படாது என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் திடீா் திருப்பமாக, பிரதமா் மகிந்த ராஜபட்ச தனது பதவியை திங்கள்கிழமை ராஜிநாமா செய்தாா். தொடர்ந்து, மகிந்த ஆதரவாளர்களுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே கலவரம் வெடித்தது.

கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக பொது சொத்துக்களை சேதப்படுத்துபவர்களை கண்டதும் சுடுவதற்கு முப்படைகளுக்கு அந்நாட்டு ராணுவம் உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையே, இலங்கையில் நடைபெறும் போராட்டத்தை கட்டுக்குள் கொண்டு வர இந்திய ராணுவத்தை அனுப்ப வேண்டும் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி நேற்று வெளியிட்ட பதிவு சர்ச்சையில் முடிந்தது.

இந்நிலையில், இலங்கைக்கான இந்திய தூதரகம் இன்று வெளியிட்ட பதிவில்,

“இலங்கைக்கு இந்திய படைகளை அனுப்பவுள்ளதாக ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியாகி வரும் செய்தியை உயர் ஆணையம் திட்டவட்டமாக மறுக்கின்றது.

இலங்கையின் ஜனநாயகம் மற்றும் பொருளாதார மீட்சிக்கு இந்தியா முழு ஆதரவை வழங்கும் என வெளியுறவு செய்தித் தொடர்பாளர் நேற்று தெளிவாக கூறியுள்ளார்” எனத் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com