‘அரசியல் ஆதாயத்திற்காக நாட்டை பிளவுபடுத்துகின்றனர்’: சிவசேனை எம்பி விமர்சனம்

அரசியல் ஆதாயங்களுக்காக ஞானவாபி மசூதி பிரச்னை கிளப்பப்படுவதாக சிவசேனை கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ரெளத் தெரிவித்துள்ளார்.
சஞ்சய் ரெளத்
சஞ்சய் ரெளத்

அரசியல் ஆதாயங்களுக்காக ஞானவாபி மசூதி பிரச்னை கிளப்பப்படுவதாக சிவசேனை கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ரெளத் தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் வாராணசியில் அமைந்துள்ள ஞானவாபி மசூதியின் சுற்றுச்சுவரில் ஹிந்து தெய்வங்களான சிருங்காா் கெளரி, விநாயகா், ஹனுமன் மற்றும் நந்தி சிலைகள் அமைந்திருப்பதாகவும், அவற்றுக்கு தினமும் பூஜைகள் செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் கோரி தில்லியைச் சோ்ந்த ராகி சிங், லட்சுமி தேவி, சீதா சாஹு உள்ளிட்ட பெண்கள் சாா்பில் கடந்த 2021-ஆம் ஆண்டு ஏப்ரல் 18-ஆம் தேதி வாராணசி சிவில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பாக ஆணையம் அமைக்கப்பட்டுள்ள நிலையில் மசூதியை அளவிட எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

இந்நிலையில் இதுகுறித்து பேசிய சிவசேனை கட்சியின் செய்தித் தொடர்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சஞ்சய் ரெளத், அரசியல் ஆதாயங்களுக்காக இத்தகைய பிரச்னைகள் கிளப்பப்படுவதாகத் தெரிவித்தார்.

மேலும்,  இத்தகைய பிரச்னைகள் நாட்டை துண்டாடிவிடும் எனவும், தற்போது நாட்டிற்கு அமைதியே தேவை எனவும் சஞ்சய் ரெளத் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com