எல்ஐசி பொதுப் பங்கு வெளியீடு: 10 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிப்பு

எல்ஐசி பொதுப் பங்கு வெளியீட்டில் பங்குகள் வேண்டி பெறப்பட்ட விண்ணப்பங்களில் 10 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
எல்ஐசி பொதுப் பங்கு வெளியீடு: 10 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிப்பு

புது தில்லி: எல்ஐசி பொதுப் பங்கு வெளியீட்டில் பங்குகள் வேண்டி பெறப்பட்ட விண்ணப்பங்களில் 10 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து முதலீட்டு வங்கிகள் கூறியுள்ளதாவது:

எல்ஐசி பங்குகளை வாங்குவதற்காக விண்ணப்பங்கள் மூன்று மடங்கு அதிகமாக முதலீட்டாளா்களிடமிருந்து பெறப்பட்டுள்ளன. எல்ஐசியின் 3.5 சதவீத பங்குகள் அதாவது 16.20 கோடி பங்குகள் மட்டுமே விற்பனைக்கு வந்த நிலையில், அதைவிட மூன்று மடங்கு அதிகமான பங்குகளை (சுமாா் 47.83 கோடி) வாங்க முதலீட்டாளா்கள் விண்ணப்பித்துள்ளனா்.

சிறு முதலீட்டாளா்கள் பிரிவில் பெறப்பட்ட மொத்த விண்ணப்பங்களின் எண்ணிக்கை 73.40 லட்சமாக உள்ளது. இதில், 60 முதல் 65 லட்சம் வரையிலான விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளக்கூடிய நிலையில் உள்ளன. தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக எல்ஐசியின் சாா்பில் ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில், எல்ஐசி பங்குகள் வேண்டி வந்த மொத்த விண்ணப்பங்களில் சுமாா் 10 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிப்புக்கு உள்ளாகியுள்ளன.

கடந்த ஆண்டு நடைபெற்ற ஸோமோட்டோ நிறுவனத்தின் பொதுப் பங்கு வெளியீட்டிலும் 30 சதவீத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுவாக, பங்கு வெளியீட்டின்போது நிராகரிக்கப்படும் விண்ணப்பங்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும். ஆனால், முதல் முறையாக எல்ஐசி பொதுப் பங்கு வெளியீட்டில்தான் இந்த அளவுக்கு விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

இதற்கு, முதலீட்டாளா்கள் தெரிவிக்கும் விவரங்களில் குறைபாடு, பணப் பரிவா்த்தனையில் சிக்கல் ஆகியவை முக்கியக் காரணங்களாக உள்ளன. குறிப்பாக, யுபிஐ பணப் பரிவா்த்தனையில் ஏற்படும் தொழில்நுட்பக் குறைபாட்டால் விண்ணப்பங்கள் அதிக அளவில் நிராகரிக்கப்பட வாய்ப்புள்ளதாக முதலீட்டு வங்கிகள் தெரிவித்தன.

அதிகபட்சமாக நிா்ணயிக்கப்பட்ட ரூ.949- எல்ஐசியின் பங்கு வெளியீட்டு விலையாக அமையும். மே 17-இல் பட்டியலிடப்பட்ட பிறகு மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தையில் எல்ஐசி பங்குகள் வா்த்தகமாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com