
ஐக்கிய அரபு அமீரக புதிய அதிபருக்கு பிரதமர் மோடி வாழ்த்து
ஐக்கிய அரபு அமீரகத்தின் புதிய அதிபராக நியமிக்கப்பட்டுள்ள ஷேக் முகமது பின் சயீது அல் நஹ்யானுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் கலீஃபா பின் சயீது அல் நஹ்யான் உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து புதிய அதிபராக ஷேக் முகமது பின் சயீது அல் நஹ்யான் நியமிக்கப்பட்டார்.
இதையும் படிக்க | திமிங்கலத்தின் வயிற்றில் பிளாஸ்டிக் கழிவுகள்: கவலையில் கடல் ஆர்வலர்கள்
இந்நிலையில் புதிய அதிபர் நஹ்யானுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது சுட்டுரைப் பதிவில் அவர், “அவரது ஆற்றல்மிக்க மற்றும் தொலைநோக்கு தலைமையின் கீழ், இந்திய-அமீரக உறவு தொடர்ந்து ஆழமடையும் என்று நான் நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.