
திமிங்கலத்தின் வயிற்றில் பிளாஸ்டிக் கழிவுகள்: கவலையில் கடல் ஆர்வலர்கள்
அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய ராட்சத திமிங்கலத்தின் வயிற்றில் குவியல் குவியலாக பிளாஸ்டிக் கழிவுகளை இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தில் நேற்று முன்தினம் 47 அடி நீளம் கொண்ட ராட்சத திமிங்கலம் இறந்த நிலையில் கரை ஒதுங்கியது. இந்த திமிங்கலத்தை உடற்கூராய்வு செய்த மருத்துவர்கள் அதன் வயிற்றில் சேதமடைந்த மீன்பிடி வலைகள், பிளாஸ்டிக் கழிவுகள் இருந்ததாகத் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்க | இலங்கையில் 4 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு
எனினும் திமிங்கலத்தின் மரணத்திற்கான காரணம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும், அதன்பின்னரே உரிய காரணத்தை தெரிவிக்க முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.