8 மாதங்களுக்குப் பிறகு தில்லியிலிருந்து லேவிற்கு பேருந்து சேவைகள் தொடக்கம்!

8 மாத காத்திருப்புக்குப் பின்னர் லஹுல் மற்றும் ஸ்பிட்டி மாவட்டத்தின் கீலாங் பகுதியிலிருந்து லடாக்கின் லே (leh)-விற்கு பேருந்து சேவைகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் மீண்டும் தொடங்கியுள்ளன.
கோப்புப்படம்
கோப்புப்படம்

8 மாத காத்திருப்புக்குப் பின்னர் லஹுல் மற்றும் ஸ்பிட்டி மாவட்டத்தின் கீலாங் பகுதியிலிருந்து லடாக்கின் லே (leh)-விற்கு பேருந்து சேவைகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் மீண்டும் தொடங்கியுள்ளன.

இந்த பேருந்து போக்குவரத்து சேவை பனிக்காலங்களில் ஹிமாசலப் பிரதேசம் வழியாக இயக்கப்படமால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்த சேவை தற்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. 

இன்று காலையில் கீலாங்கின் துணை மண்டல அலுவலர் பிரியா நக்டா, 17 பயணிகளுடன் கூடிய இந்த பேருந்து சேவையை தொடங்கி வைத்தார். வழக்கமாக இந்த சேவை தொடங்கப்படுவதற்கு இன்னும் ஒன்றரை மாதங்கள் உள்ளன. இருப்பினும் இந்த ஆண்டு பனியினை அப்புறப்படுத்தி வழித்தடங்கள் முன்னதாகவே சரிசெய்யப்பட்டுள்ளன.  அதன் காரணமாகவே இந்த ஆண்டு முன்னதாகவே இந்த பேருந்து சேவை இயக்கப்படுகிறது.

இந்த பேருந்து சேவை தில்லியிலிருந்து கீலாங் வழியாக லே (leh)-விற்கு இரண்டு மாற்று வழித்தடங்களில் இயக்கப்பட உள்ளது. முதலில் பேருந்து கீலாங்கிலிருந்து லேவிற்கும் அதன்பின் லே (leh)-விலிருந்து டெல்லிக்கும் இயக்கப்பட உள்ளது. பேருந்து பயணிகளுடன் ஒவ்வொரு நாளும் காலை 5 மணிக்கு புறப்பட்டு 365 கிலோ மீட்டர் தூரம் சென்று லே (leh)-வை சென்றடையும். அதன்பின் லே (leh)-விலிருந்து 1026 கிலோ மீட்டர் தூரம் சென்று தில்லியை சென்றடையும்.

கடந்த ஆண்டு இந்த பேருந்து சேவை ஜூலை மாதம் 1 ஆம் தேதி முதல் தொடங்கியது. இந்த ஆண்டு இந்த பேருந்து சேவை முன்னதாகவே தொடங்கியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com