கடும் வறட்சி: குழி தோண்டி குடிநீரெடுக்கும் சூழலுக்கு தள்ளப்பட்ட மக்கள்!

மகாராஷ்டிரத்தில் உள்ள நிலவும் கடும் குடிநீர் தட்டுப்பாட்டால் சந்திரபூர் மாவட்டத்தில் உள்ள கிராம மக்கள் வடிகால்களில் குழி தோண்டி குடிநீர் எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
கடும் வறட்சி: குழி தோண்டி குடிநீரெடுக்கும் சூழலுக்கு தள்ளப்பட்ட மக்கள்!

மகாராஷ்டிரத்தில் உள்ள நிலவும் கடும் குடிநீர் தட்டுப்பாட்டால் சந்திரபூர் மாவட்டத்தில் உள்ள கிராம மக்கள் வடிகால்களில் குழி தோண்டி குடிநீர் எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

மகாராஷ்டிரத்தின் சந்திரபூர் மாவட்டத்தில் உள்ள கோந்த்பிப்ரி வட்டாரத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. சந்திரபூர் மாவட்டத்தில் வரும் புகைப்படங்கள் நம்மை ஆச்சர்யமடையவைக்கின்றன. கோந்த்பிப்ரி மாவட்டத்தில் உள்ள ஹெட்டி நந்தகயோன், சக் நந்தகயோன் மற்றும் டோல் நந்தகயோன் ஆகிய கிராமங்களில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. 

மக்கள் பாத்திரங்களைப் பயன்படுத்தி வடிகால்களில் எட்டு அடி ஆழத்திற்கு குழி தோண்டியுள்ளனர். இந்த குழியானது கிராமத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என அனைவரும் இந்த குழியிலிருந்துதான் குடிநீர் எடுத்துச் செல்கின்றனர். கோடைக் காலங்களில் இந்த வடிகால் முழுவதுமாக வற்றி விடுகிறது.

இதனால் மக்கள் ஆழமான குழிகள் தோண்டும் நிலை ஏற்படுகிறது. அப்படி குழிகள் தோண்டும் போது ஆரம்பத்தில் கிடைக்கும் குடிநீர் மணலுடன் கலந்து வரும். பின்னர் துணியினைப் பயன்படுத்தி அந்த நீரினை வடிகட்டி பின்னர் அதனை எடுத்துச் செல்கின்றனர். அவ்வாறு எடுத்துச் செல்லும் நீரை நன்கு காய்ச்சிய பின்பே பருகுகின்றனர்.

வடிகாலில் நீர் குறைந்து விட்டால் அடுத்த நபர் நீர் நிரம்பும் வரை காத்திருந்துதான் எடுத்து செல்கின்றனர். கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரிப்பதால் நிலத்தடி நீரின் அளவும் குறைந்து கொண்டே செல்கிறது. இதனால் அதிக ஆழத்திற்கு குழி தோண்ட வேண்டிய நிலை உருவாகிறது. இந்த நிலை தலைமுறை தலைமுறையாக நீடித்து வருகிறது. தரவுகளின் அடிப்படையில் பார்க்கும் போது, இந்த பகுதியைச் சேர்ந்த 7 கிராமங்களுக்கு மத்திய அரசின் திட்டத்தின் கீழ் குடிநீர் குழாய்கள் அமைத்து தரப்பட்டுள்ளது.

அதன் படி இந்த கிராமங்களுக்கு நாளுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இருப்பினும், தண்ணீர் தட்டுப்பாட்டை சந்தித்து வரும் மேற்கூறிய மூன்று கிராமங்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் குடிநீர் கிடைக்கவில்லை. இந்த மூன்று கிராமங்களில் பலரின் வீட்டில் குடிநீர் குழாய்கள் பொருத்தப்பட்டுள்ளன.ஆனால், அவற்றில் குடிநீர் வருவது இல்லை.

இதன் காரணத்தினாலேயே இந்த கிராம மக்கள் வடிகால்களில் குழி தோண்டி குடிநீர் எடுக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com