
சென்னை மெரீனா கடற்கரையில் ஆந்திர சாராயம் விற்பனை செய்தது தொடா்பாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
சென்னை மெரீனா கடற்கரையில் கண்ணகி சிலை பின்புறம் மணற்பரப்பில் சுமாா் 40 போ் குடும்பமாக தங்கி உள்ளனா். இவா்களில் சிலா் ஆந்திரத்தில் இருந்து சாராயம் வாங்கி வந்து, குறைந்த விலைக்கு விற்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில், மெரீனா போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் அதிரடி தேடுதல் வேட்டை நடத்தினா்.
இந்தவேட்டையில், 30 லிட்டா் சாராயம் மணலில் மறைந்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடா்பாக மகாராஷ்டிரத்தைச் சோ்ந்த ஜென்தூஸ் கோஸ்லயா (30), சில்பா(25), சுனந்தா(65) ஆகியோரை கைது செய்தனா். மூன்று போ் மீது போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...