ம.பி.யில் தலித் திருமண ஊர்வலத்தில் கற்கள் வீச்சு: 5 பேர் கைது

மத்தியப் பிரதேசத்தின் ராஜ்கர் மாவட்டத்தில் தலித் திருமணத்தில் ஒரு குழுவினர் கற்களை வீசி தாக்குதல் நடத்தியதாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், 

ஞாயிற்றுக்கிழமை இரவு பிப்லாயா கிராமத்தில் இந்த சம்பவம் நடைபெற்றது. கிராமத்தைச் சேர்ந்த சில செல்வாக்கு மிக்கவர்கள், பெரும்பாலும் டாங்கி சமூகத்தைச் சேர்ந்தவர்கள், தலித் மணமகன் ஊர்வலத்துடன் தங்கள் கிராமத்திற்கு வந்ததை எதிர்த்து, திருமண ஊர்வலத்தில் கற்களை வீசியதாகக் கூறப்படுகிறது. 

போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டக்காரர்களை கலைக்க கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். 

அதன்பின்னர், மணமகனின் திருமண ஊர்வலம் போலீஸ் பாதுகாப்புடன் அமைதியாக நடைபெற்றது. 

இதுதொடர்பாக 18 அடையாளம் தெரியாத நபர்கள் உள்பட 40 பேர் மீது சாதிகள் மற்றும் பழங்குடியினர் சட்டம் மற்றும் இந்தியத் தண்டனைச் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
 
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com