
கோப்புப்படம்
குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு வானிலை சரியில்லாத காரணத்தினால் இன்று (திங்கட்கிழமை) இரவு நீலகிரிக்கு செல்லும் முடிவு மாற்றப்பட்டுள்ளது.
குடியரசு துணைத் தலைவர் அபுதாபியிலிருந்து இன்று விமானம் மூலம் கோயம்புத்தூர் விமான நிலையத்திற்கு வந்தடைந்தார். அங்கிருந்து அவர் நீலகிரிக்கு சிறப்பு விமானம் மூலம் செல்வதாக இருந்தது. அந்த முடிவு மோசமான வானிலை காரணமாக கைவிடப்பட்டுள்ளது. இதனையடுத்து, அவர் அரசு விருந்தினர் மாளிகையில் இன்று இரவு தங்கி உதகை பயணத்தை காலையில் மேற்கொள்ள உள்ளார்.
உதகையில் அவர் மே 19 ஆம் தேதி வரை இருப்பார் எனவும், அதற்கு அடுத்த நாள் கோயம்புத்தூர் செல்லும் அவர் அங்கிருந்து தில்லிக்கு புறப்படவுள்ளார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...