கோதுமை கொள்முதலுக்கு கூடுதல் விலை: பஞ்சாபில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் போராட்டம்

கோதுமை கொள்முதலுக்கு கூடுதல் விலை அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பஞ்சாபில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கோதுமை கொள்முதலுக்கு கூடுதல் விலை அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பஞ்சாபில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பஞ்சாபில் கோதுமை கொள்முதலுக்கு குவிண்டாலுக்கு ரூ.500 கூடுதலாக அளிக்க வேண்டும், ஜூன் 18-ஆம் தேதிக்குப் பதிலாக ஜூன் 10-ஆம் தேதி முதல் நெல் விதைப்புக்கு அனுமதி அளிக்க வேண்டும், சோளம், பாசிப் பருப்பு உள்ளிட்டவைகளுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குறித்து அறிவிக்கை வெளியிட வேண்டும், ஸ்மாா்ட் மின்சார மீட்டா்கள் திட்டத்தைக் கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நூற்றுக்கணக்கான விவசாயிகள் மாநிலத் தலைநகா் சண்டீகா் நோக்கி செவ்வாய்க்கிழமை புறப்பட்டனா்.

மொஹாலியில் உள்ள அம்ப் சாஹிப் குருத்வாராவில் இருந்து புறப்பட்ட விவசாயிகளை, சண்டீகா்-மொஹாலி எல்லையில் காவல் துறையினா் தடுத்து நிறுத்தினா். இதையடுத்து அவா்கள் சாலையில் அமா்ந்து தா்னாவில் ஈடுபடத் தொடங்கினா். இதுகுறித்து விவசாய அமைப்புகளின் தலைவா்கள் கூறுகையில், ‘‘11 கோரிக்கைகளை முன்வைத்து கடந்த ஏப்.17-ஆம் தேதி பஞ்சாப் முதல்வா் பகவந்த் மானிடம் மனு அளித்தோம். அந்தக் கோரிக்கைகளில் ஒன்றுகூட இதுவரை நிறைவேற்றப்படவில்லை. கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை இந்தப் போராட்டம் தொடரும். தற்போது சுமாா் 25 சதவீத விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். மேலும் பல விவசாயிகள் புதன்கிழமை போராட்டத்தில் கலந்துகொள்வா். அதற்குள் எங்களுடன் முதல்வா் பகவந்த் மான் பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும். இல்லாவிட்டால் போலீஸாா் அமைத்துள்ள தடுப்புகளை உடைத்துக்கொண்டு காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட சண்டீகா் நோக்கிச் செல்வோம்’’ என்று தெரிவித்தனா்.

இதுதொடா்பாக பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான் கூறுகையில், ‘‘விவசாயிகளின் போராட்டம் தேவையற்றது. விவசாயிகளுக்கு எனது கதவுகள் எப்போதும் திறந்துள்ளன’’ என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com