ஹார்திக் படேல் : காங்கிரஸில் இருந்து விலக காரணம் ?

ஹார்திக் படேல் : காங்கிரஸில் இருந்து விலக காரணம் ?

குஜராத் : குஜராத் காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவர் பதவியில் இருந்து கருத்து வேறுபாடு காரணமாக ஹார்திக் படேல் விலகியுள்ளார். 

குஜராத் : குஜராத் காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவர் பதவியில் இருந்து கருத்து வேறுபாடு காரணமாக ஹார்திக் படேல் விலகியுள்ளார். 

“காங்கிரஸின் அடிப்படை உறுப்பினர் மற்றும் குஜராத் காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவர் பதவியில் இருந்தும் விலகுவதற்கான தைரியம் தற்போது தான் வந்துள்ளது. எனது முடிவினை குஜராத் மக்களும் என் அரசியல் தோழர்களும்  வரவேற்பர் என நம்புகின்றேன். இந்த முடிவுக்குப் பிறகு வரும் காலங்களில் குஜராத்திற்காக உண்மையாக உழைப்பேன்” என தனது டிவிட்டரில் ஹார்திக் படேல் கூறியிருந்தார். 

அரசியல் விமர்சகர்கள் குஜராத்தில் விரைவில் தேர்தல் வரும் வேளையில் ஹார்திக் இவ்வாறு செய்தது காங்கிரஸுக்கு இது பின்னடைவை ஏற்படுத்தும் என்கின்றனர். 

ஆனால் இந்த முடிவு மாநில அரசுடனான கருத்து வேறுபாடுதானே தவிர ராகுல் காந்தி, சோனியாவுடன் அல்ல என்பதையும் குறிப்பிட்டுள்ளார். அடுத்து வரவிருக்கும் தேர்தலில் பாஜாகாவில் அல்லது ஆம் ஆத்மியில் சேரலாம் என தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும் முக்கியமான முடிவுகளை எடுக்க முடியாத குஜராத் காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவர் பதவி பிடிக்காமலும் குஜராத் காங்கிரஸ் தலைவர் பதவி கிடைக்காத வெறுப்பினாலும் ராஜிநாமா செய்ததாக சொல்லப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com