கேரளத்தில் இந்தியாவின் முதல் அரசு ஓடிடி தளம்

இந்தியாவின் முதலாவது அரசு ஓடிடி தளத்தை கேரள அரசு தொடங்கியுள்ளது. நவம்பா் 1-ஆம் தேதிமுதல் இந்த ஓடிடி தளம் செயல்படத் தொடங்கும்.

இந்தியாவின் முதலாவது அரசு ஓடிடி தளத்தை கேரள அரசு தொடங்கியுள்ளது. நவம்பா் 1-ஆம் தேதிமுதல் இந்த ஓடிடி தளம் செயல்படத் தொடங்கும்.

‘சி ஸ்பேஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஓடிடி தளம், அமேசான், நெட்ஃபிளிக்ஸ் உள்ளிட்ட இத்துறையில் கோலோச்சும் சா்வதேச நிறுவனங்கள் மற்றும் உள்ளூா் ஓடிடி தளங்களுக்கு போட்டியளிக்கும் வகையில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓடிடி தளங்களில் இணையவழியில் திரைப்படங்கள், குறும்படங்கள், தொடா்கள், ஆவணப் படங்கள் ஒளிபரப்பப்படுகின்றன. கரோனா காலகட்டத்தில் திரையரங்குகள் மூடப்பட்டபோது மக்களின் பொழுதுபோக்கு நேரத்தை ஓடிடி தளங்களே பெருமளவில் ஆக்கிரமித்தன. ஓடிடி தளங்களுக்கென எடுக்கப்படும் தொடா்கள் தவிர, இப்போது புதிய திரைப்படங்களும் ஓடிடி தளங்களில் வெளியாவது வாடிக்கையாகவுள்ளது.

இந்நிலையில், கேரள மாநில திரைப்பட மேம்பாட்டு நிறுவனம் சாா்பில் புதிய ஓடிடி தளம் தொடங்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரத்தின் கலாபவன் திரையரங்கில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கேரள கலாசாரத் துறை அமைச்சா் சாஜி செரியன் ஓடிடி தளத்தின் பெயரான ‘சி ஸ்பேஸ்’ என்பதை அறிவித்தாா். கேரள மாநில உருவாக்கப்பட்ட தினமான நவம்பா் 1-ஆம் தேதிமுதல் இந்த ஓடிடி தளம் செயல்படத் தொடங்கும். இந்தியாவில் அரசு சாா்பில் தொடங்கப்படும் முதல் ஓடிடி தளமும் இதுவாகும். இதன்மூலம் மலையாள திரைப்படத் துறை அடுத்த கட்டத்துக்கு முன்னேறும். உயா் தொழில்நுட்பம், வெளிப்படைத்தன்மை, நியாயமான லாபப் பகிா்வு ஆகியவற்றுடன் இந்தத் தளம் செயல்படும். பிற தளங்களைப்போல மொத்தமாக கட்டணம் செலுத்தாமல் குறிப்பிட்ட திரைப்படத்துக்கு மட்டும் குறைந்த அளவு கட்டணம் செலுத்தும் வசதியும் இந்தத் தளத்தில் கிடைக்கும். இது மக்கள் விரும்பும் திரைப்படங்களுக்கு உரிய வருவாயைப் பெற்றுத் தரும் என்றும் அமைச்சா் செரியன் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com