'முஸ்லிம்களை துன்புறுத்துவதில் பாஜக ஆளும் மாநிலங்கள் போட்டியிடுகின்றன' - மெஹபூபா முஃப்தி

முஸ்லிம் மக்களை துன்புறுத்துவதில் பாஜக ஆளும் மாநிலங்கள் அனைத்தும் ஒன்றுக்கொன்று போட்டியிடுவதாக ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வரும் மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான மெஹபூபா முஃப்தி தெரிவித்துள்ளார். 
மெஹபூபா முப்தி
மெஹபூபா முப்தி

முஸ்லிம் மக்களை துன்புறுத்துவதில் பாஜக ஆளும் மாநிலங்கள் அனைத்தும் ஒன்றுக்கொன்று போட்டியிடுவதாக ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வரும் மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான மெஹபூபா முஃப்தி தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், 

'முஸ்லிம்கள் எதிர்வினையாற்றத் தூண்டிவிடப்படுகின்றனர். இதனால் குஜராத் அல்லது உ.பி.யில் ஏற்படுத்தியதைப் போன்ற மற்றொரு அத்தியாயத்தை செயல்படுத்த அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். 

ஆங்கிலேயர்கள், இந்துக்களை முஸ்லிம்களுக்கு எதிராக நிறுத்தினார்கள். இன்று பாஜக அதனைச் செய்துகொண்டிருக்கிறது. பிரதமர் இதை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருக்கிறார். அவரது கட்சி, அவர்கள் செய்வது சரி என்று நினைக்கிறது. 

முஸ்லிம் மக்களை துன்புறுத்துவதில் பாஜக ஆளும் மாநிலங்கள் அனைத்தும் ஒன்றுக்கொன்று போட்டியிடுகின்றன. குஜராத் மாடல், உ.பி. மாடல், அசாம் மாடல்,... என நாட்டை மாற்ற முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. முஸ்லிம்களை யார் அதிகம் தொந்தரவு செய்ய முடியும் என்பதில் முதல்வர்கள் போட்டி போடுகிறார்கள். இதனாலே கோயில்கள் மற்றும் மசூதிகள் குறித்து கேள்விகளும் பிரச்னைகளும் எழுப்பப்படுகின்றன' என்று கூறியுள்ளார். 

முன்னதாக, அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ ஷர்மா, 'மதரஸா என்ற வார்த்தையே இல்லாமல் போக வேண்டும். இந்த 'மதரஸா' மனதில் இருக்கும் வரை குழந்தைகளால் டாக்டரோ, இன்ஜினியரோ ஆக முடியாது' என சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். 

'மதரஸா' எனும் இஸ்லாமிய மார்க்கப் பள்ளிகளில், சிறுவர்களுக்கு குர்-ஆன் மட்டும் மத போதனைகள் பயிற்றுவிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com