ஒடிசா சாலை விபத்து: பிரதமர் மோடி இரங்கல் 

ஒடிசாவில் கஞ்சம் மாவட்டத்தில் நடந்த கோர விபத்தில் உயிரிழந்திருப்பது வேதனை அளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை தெரிவித்தார். 
பிரதமா் நரேந்திர மோடி
பிரதமா் நரேந்திர மோடி

ஒடிசாவில் கஞ்சம் மாவட்டத்தில் நடந்த கோர விபத்தில் உயிரிழந்திருப்பது வேதனை அளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை தெரிவித்தார். 

ஒடிசாவின் கந்தமால் மற்றும் கஞ்சம் மாவட்டங்களின் எல்லையில் உள்ள கலிங்ககாட் என்ற இடத்தில் செவ்வாய்க்கிழமை இரவு பேருந்து கவிழ்ந்ததில் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த 4 பெண்கள் உள்பட 6 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர்.40 பேர் காயமடைந்தனர்.

இந்த சம்பவம் கஞ்சத்தில் உள்ள துர்காபிரசாத் கிராமத்திற்கு அருகே நள்ளிரவில் நடந்ததாகவும், காயமடைந்தவர்களில் 15 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் போலீசார் புதன்கிழமை தெரிவித்தனர்.

இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்ட சுட்டுரை பதிவில், 

ஒடிசாவின் கஞ்சம் மாவட்டத்தில் நடந்த ஒரு பயங்கரமான விபத்தில் உயிர் இழந்திருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது. 

இந்த சோகமான நேரத்தில், பலியான நபர்களின் குடும்பங்களுக்கு கடவுள் வலிமை தரட்டும் என்றார். 

காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்திக்கிறேன் என்று பிரதமர் மோடி தனது அலுவலகத்தில் இருந்து ட்வீட் செய்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com