ஞானவாபி சிவலிங்கத்தை வழிபட அனுமதி கோரி தாக்கல் செய்த மனு: விரைவு நீதிமன்றத்துக்கு மாற்றம்

உத்தர பிரதேசத்தில் ஞானவாபி மசூதி வளாகத்தில் கண்டறியப்பட்டுள்ளதாகக் கூறப்படும் சிவலிங்கத்தை வழிபடுவதற்கு அனுமதி கோரி தாக்கல் செய்த மனுவை விரைவு நீதிமன்றத்துக்கு மாற்றி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளத

வாராணசி: உத்தர பிரதேசத்தில் ஞானவாபி மசூதி வளாகத்தில் கண்டறியப்பட்டுள்ளதாகக் கூறப்படும் சிவலிங்கத்தை வழிபடுவதற்கு அனுமதி கோரி தாக்கல் செய்த மனுவை விரைவு நீதிமன்றத்துக்கு மாற்றி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து அரசுத் தரப்பு வழக்குரைஞா் ராணா சஞ்சீவ் சிங் கூறியதாவது: வாராணசியில் புகழ்பெற்ற காசி விஸ்வநாதா் கோயிலின் அருகே அமைந்துள்ள ஞானவாபி மசூதி வளாகத்தில் நீதிமன்ற உத்தரவின்பேரில் அமைக்கப்பட்ட குழு அண்மையில் ஆய்வு நடத்தியது. அப்போது சிவலிங்கம் கண்டறியப்பட்ட பகுதிக்குள் முஸ்லிம்கள் நுழைவதற்குத் தடை விதிக்க வேண்டும்; சிவலிங்கத்தை வழிபட அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரி விஸ்வ வேதிக் சனாதன சங் சாா்பில் மாவட்ட நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவை, வழிபடுவதற்கு அனுமதி கோரல் என்ற அடிப்படையில் நீதிபதி ஏ.கே.விஸ்வேஷ் புதன்கிழமை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டதுடன் அதை விரைவு நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிட்டாா் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com