விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பெண்களுக்கு பேருந்தில் கட்டணச் சலுகை: ஹிமாச்சலப் பிரதேச அமைச்சரவை ஒப்புதல்

ஹிமாச்சலப் பிரதேசத்தில் மாநில அரசின் பேருந்து போக்குவரத்தில் பெண்களுக்கு 50 சதவிகிதம் கட்டண சலுகை வழங்குவதற்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

News image
Updated On :27 மே 2022, 1:57 pm

DIN

ஹிமாச்சலப் பிரதேசத்தில் மாநில அரசின் பேருந்து போக்குவரத்தில் பெண்களுக்கு 50 சதவிகிதம் கட்டண சலுகை வழங்குவதற்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் ஹிமாச்சலப் பிரதேசத்தில் நடைபெற்ற 75வது ஹிமாச்சல் தின விழாவில் கலந்து கொண்ட அம்மாநில முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் மாநில பேருந்து போக்குவரத்தைப் பயன்படுத்தும் பெண்களுக்கு உதவும் வகையில் பெண்களுக்கான பேருந்து கட்டணம் 50 சதவிகிதம் குறைக்கப்படுவதாக அறிவித்திருந்தார். 

இந்நிலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முதல்வர் ஜெய்ராம் தாக்கூரின் அறிவிப்பிற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.160 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும், மேலும் 360 புதிய பேருந்துகளும் வாங்கப்பட உள்ளன.

இவை மட்டுமல்லாது பெண்களுக்கான மகப்பேறு விடுப்பு 12 வாரங்களாக உயர்த்தப்பட்டுள்ளது. மே 1ஆம் தேதி முதல் கட்டணமில்லா குடிநீர் இணைப்பும் குடும்பத் தலைவிகளுக்கு  வழங்கப்பட்டுள்ளது. ஹிமாச்சலப் பிரதேசத்தில் நடப்பாண்டு இறுதியில் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.