ஐநாவின் அறிவுறுத்தலை நிராகரித்த தலிபான்கள்

ஆப்கானிஸ்தானில் விதிக்கப்பட்டு வரும் புதிய கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது தொடர்பான ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் பரிந்துரையை தலிபான்கள் நிராகரித்துள்ளனர்.
ஆப்கனில் பெண்களுக்கு புதிய கட்டுப்பாடு விதித்த தலிபான்கள்
ஆப்கனில் பெண்களுக்கு புதிய கட்டுப்பாடு விதித்த தலிபான்கள்

ஆப்கானிஸ்தானில் விதிக்கப்பட்டு வரும் புதிய கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது தொடர்பான ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் பரிந்துரையை தலிபான்கள் நிராகரித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தான் நாட்டில் ஆட்சியைக் கவிழ்த்து தலிபான்கள் பொறுப்பேற்றது முதல் பல புதிய கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். மத நம்பிக்கையை முன்வைத்து விதிக்கப்படும் இந்தக் கட்டுப்பாடுகள் பிற்போக்குத்தனம் வாய்ந்தவை என உலகம் முழுவதும் விமர்சனம் எழுந்து வருகிறது.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக பொதுவெளிக்கு வரும் பெண்கள் தங்களது முகங்களை மூடிக் கொள்ள வேண்டும் என்று தலிபான்களின் தலைவர் ஹிபதுல்லா அறிவித்தார். இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.

இதுதொடர்பாக விமர்சனம் தெரிவித்த ஐக்கிய நாடுகள் அவையின் பாதுகாப்பு கவுன்சில் தலிபான்கள் ஆப்கன் பெண்களின் அடிப்படை மற்றும் மனித உரிமைகளில் தலையிடுவதாக குற்றம்சாட்டியது. மேலும் பெண் குழந்தைகளுக்கு மறுக்கப்பட்டுவரும் கல்வியை மீண்டும் கிடைக்கச் செய்ய வேண்டும் எனவும் கோரியது.

மேலும் ஆப்கனில் உள்ள தலிபான்கள் அரசுக்கு எதிராக வியாழக்கிழமை தீர்மானமும் நிறைவேற்றியது.

இந்நிலையில் ஆப்கனில் பெண்களுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகளைத் திரும்பப் பெறக்கோரும் ஐநாவின் அறிவுறுத்தலை நிராகரிப்பதாக ஆப்கன் தலிபான் அரசு அறிவித்துள்ளது.

ஆப்கனில் அமைந்துள்ள தலிபான்கள் அரசை உலக நாடுகள் அங்கீகரிக்காத காரணத்தால் ஐநாவில் அந்நாட்டின் பிரதிநிதி இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com