சிவாஜி கணேசன் நூற்றாண்டு பிறந்தநாள் விழா! அரசு மீது நம்பிக்கை - பிரபுதங்கம், வெள்ளி விலை குறைந்தது! இன்றைய நிலவரம் (அக். 1)சென்னையில் டெங்கு பாதிப்பு 2 மடங்கு அதிகரிப்பு!சிவாஜி கணேசன் பிறந்தநாள்: தமிழக அரசு சார்பில் மரியாதை!ஆண்டுதோறும் சினிமா, சின்ன திரை விருதுகள்: ராஜ்மோகன் உறுதி கத்திக்குத்துக்குப் பிறகும் மக்கள் உயிரைக் காத்த இந்திய விமானி! மோடி புகழாரம்ஹிந்து கடவுள்கள் குறித்து தெலங்கானா முதல்வா் கருத்து: காங்கிரஸுக்கு பாஜக கண்டனம்பட்டாசுகளுக்கு முழு தடை விதிக்கப்படாது: உச்சநீதிமன்றம் எத்தியோப்பியாவில் 3 இந்தியா்கள் மாயம்: கடத்தப்பட்டதாக குடும்பத்தினா் தகவல் இந்தியாவுக்கு வரலாற்று வெற்றி: தொடரையும் கைப்பற்றியதுஇ-கேஒய்சி செய்யப்படாத குடும்ப அட்டைகள் முடக்கப்படாது: தமிழக அரசு விளக்கம்

மாநிலங்களவைத் தேர்தல்: ஒரு விதியைக்கூட பின்பற்றாத ராமதாஸ் தரப்பு வேட்பாளர் சுவாமிநாதன்?

மாநிலங்களவைத் தேர்தலின் ஒரு விதியைக்கூட பின்பற்றாததாக ராமதாஸ் தரப்பு வேட்பாளர் சுவாமிநாதனின் வேட்புமனு தள்ளுபடி குறித்து...

Ramadoss

ராமதாஸ் - கோப்புப் படம்

Published On :

மாநிலங்களவைத் தேர்தலின் ஒரு விதியைக்கூட பின்பற்றாத பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பு வேட்பாளர் சுவாமிநாதனின் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாநிலங்களவைத் தேர்தலில் பாமகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் என்று கட்சி நிறுவனர் ராமதாஸின் உதவியாளரான சுவாமிநாதன் சுயேட்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார்.

இந்த நிலையில், வேட்புமனுவில் தேர்தல் ஆணையத்தின் ஒரு விதியைக்கூட சுவாமிநாதன் பின்பற்றவில்லை என்று மனு தள்ளுபடி செய்யப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தகவல்களின்படி, வேட்புமனு முத்திரைத் தாளில் அளிக்கப்பட வேண்டும்; ஆனால், சுவாமிநாதன் மனுவை வெறும் காகிதமாகவே அளித்தார்.

வேட்புமனுவில் மொத்தமுள்ள 15 பக்கங்களில் ஒரு பத்தியைக்கூட காலியாக விடக்கூடாது. ஆனால், ஒரு பத்தியைக்கூட சுவாமிநாதன் நிரப்பவில்லை.

மனுவின் அனைத்து பக்கங்களிலும் மனுதாரர் கையொப்பமிட வேண்டும். ஆனால், சுவாமிநாதன் ஒரு பக்கத்தில் மட்டும் கையொப்பமிட்டு, மீதமுள்ள 14 பக்கங்களில் கையொப்பமிடவில்லை.

மனுதாரர் மீதான வழக்குகள், வருமானம், சொத்துகள், கடன்கள், குடும்பம் குறித்த அனைத்து தகவல்களையும் சமர்ப்பிக்க வேண்டும். ஆனால், அவ்வாறான எந்தவொரு தகவலையும் சுவாமிநாதன் அளிக்கவில்லை. அனைத்து பக்கங்களிலும் வழக்குரைஞர் சான்றளிக்க வேண்டும். ஆனால், சுவாமிநாதனின் மனுவில் வழக்குரைஞர் என்று எவரின் பெயரும் கையொப்பமும் இடம்பெறவில்லை.

மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட 10 சட்டப்பேரவை உறுப்பினர்கள் முன்மொழிய வேண்டும், சுவாமிநாதனை ஒருவருகூட முன்மொழியவில்லை.

அதுமட்டுமின்றி, மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் அன்புமணியின் வேட்புமனுவை ஏற்கக் கூடாது என்றும் ராமதாஸ் தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Summary

Rajya Sabha elections: Is an Independant Candidate, not following a single rule?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.