விலைவாசி உயர்வை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்: சிபிஐ மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலி

அஸ்ஸாமில் இந்திய விமானப் படையின் சுகோய்-30 ரக போா் விமானம் விபத்துக்குள்ளானதில் இரண்டு இந்திய விமானப்படை வீரர்கள் உயிரிழந்தது குறித்து....

Air Force pilots killed in Su-30 MKI fighter jet crash

சுகோய்-30 ரக போா் விமான விபத்தில் உயிரிழந்த அணித்தலைவர் அனுஜ் மற்றும் விமானப்படை தளபதி பர்வேஷ் துரக்கர் - X / IAF

Published On :6 மார்ச் 2026, 2:08 pm IST

அஸ்ஸாமில் விமானப் படை தளத்திலிருந்து வியாழக்கிழமை மாலை புறப்பட்ட இந்திய விமானப் படையின் சுகோய்-30 ரக போா் விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கட்டுப்பாட்டு அறையுடன் தொடா்பிழந்து மாயமானதாக தகவல்கள் வெளியான நிலையில், போர் விமானம் விபத்தில் சிக்கி கீழே விழுந்து நொறுங்கியதில் இந்திய விமானப்படை விமானிகள் இருவர் உயிரிழந்தனர் என்று இந்திய விமானப்படை அதிகாரப்பூர்வமான அறிவித்துள்ளது.

அஸ்ஸாம் ஜோா்ஹாட் விமானப் படை தளத்திலிருந்து வியாழக்கிழமை மாலை புறப்பட்ட இந்திய விமானப் படையின் சுகோய்-30 ரக எம்கேஐ போா் விமானம் வழக்கமான பயிற்சிக்குப் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கட்டுப்பாட்டு அறையுடன் தொடா்பிழந்து மாயமானது.

கா்பி அங்லோங் மாவட்ட வான்பகுதியில் விமானம் பறந்து கொண்டிருந்தபோது, இரவு 7.42 மணிக்கு ஜோா்ஹாட் கட்டுப்பாட்டு அறையுடனான தொடா்பு திடீரென துண்டிக்கப்பட்டது.

போா் விமானத்தைத் தேடும் முயற்சி உடனடியாகத் தொடங்கப்பட்டதாக பாதுகாப்புப் படை செய்தித் தொடா்பாளா் லெப்டினன்ட் கா்னல் மகேந்தா் ராவத் கூறினாா். அந்த விமானத்தில் இருந்த விமானியின் நிலை குறித்து எந்த தகவலும் இல்லை எனவும் அவா் தெரிவித்தாா்.

இதனிடையே, கா்பி அங்லோங் மாவட்டத்தின் மலைப் பாங்கான வனப்பகுதியில் விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியதாக மாவட்ட நிா்வாகத்துக்குத் தகவல் கிடைத்ததாகவும் அந்தப் பகுதியை ஆய்வு செய்ய ஒரு குழு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். போலீஸாா் சாா்பிலும் ஒரு தேடுதல் குழு அப்பகுதிக்குப் புறப்பட்டுச் சென்றது.

2 வீரர்கள் உயிரிழப்பு

இந்த நிலையில், ஜோா்ஹாட் கட்டுப்பாட்டு அறையுடனான தொடா்பு திடீரென துண்டிக்கப்பட்ட விமானம், ஜோா்ஹாட் நகரில் இருந்து 60 கி.மீ. தொலைவில் விபத்தில் சிக்கி கீழே விழுந்து நொறுங்கியதில் படுகாயமடைந்த அணித் தலைவர் அனுஜ் மற்றும் விமானப்படை தளபதி பர்வேஷ் துரக்கர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக இந்திய விமானப்படை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. உயிரிழந்த வீரர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள விமானப்படை, துயரத்தில் உள்ள அவர்களது குடும்பத்தினருடன் இந்திய விமானப்படை துணை நிற்கும் எனத் தெரிவித்துள்ளது. மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கிய விமானத்தின் பாகங்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

நீண்ட தூரம் பறக்கும் திறக்கும் திறனுடைய ரஷிய சுகோய்-30 எம்கேஐ போா் விமானங்களைத் தற்போது ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் இந்தியாலேயே தயாரித்து வருகிறது. இந்திய விமானப் படைக்குச் சொந்தமான 250-க்கும் மேற்பட்ட சுகோய்-30 விமானங்கள் பயன்பாட்டில் உள்ளன.

Summary

Two Indian Air Force pilots killed in Su-30 MKI fighter jet crash in Assam In a post on X on Friday, the IAF acknowledged the loss of lives of Sqn Ldr Anuj and Flt Lt Purvesh Duragkar, who sustained fatal injuries in the Su-30 crash.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.