உத்தரப் பிரதேசத்தில் இந்திய விமானப் படையின் விமானம் புதன்கிழமை விபத்துக்குள்ளானது.
விமானத்தை இயக்கிய இரண்டு விமானப் படை அதிகாரிகளும் பாதுகாப்பாக இருப்பதாக இந்திய விமானப் படை முதல்கட்டத் தகவலை வெளியிட்டுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள பம்ரெளலி விமானப் படைத் தளத்துக்குச் சொந்தமான பறவைகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்கும் விமானம் இன்று பகல் 12.30 மணியளவில் பிரயாக்ராஜ் அருகே விபத்துக்குள்ளானது.
விபத்துக்குள்ளாகும் போது அவசர பாராசூட் உதவியுடன் இரண்டு விமானப் படையின் அதிகாரிகளும் வெளியேறியதால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
இந்த விமானத்தை பம்ரௌலி விமானப்படைத் தளத்தின் தலைமை இயக்க அதிகாரியான குரூப் கேப்டன் பிரவீன் அகர்வால் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான குரூப் கேப்டன் சுனில் குமார் பாண்டே ஆகியோர் இயக்கியுள்ளனர். இவர்களில் குரூப் கேப்டன் பிரவீன் அகர்வால் ’வாயு சேனை’ விருது பெற்றவர்.
இரண்டு அதிகாரிகளும் பாதுகாப்பாக இருப்பதாக பாதுகாப்புத் துறையின் மக்கள் தொடர்பு அதிகாரி விங் கமாண்டர் தேபார்த்தோ தார் அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும், என்ஜின் செயலிழந்ததால் விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், முழுமையான விசாரணைக்கு விமானப் படை உத்தரவிட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.