8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை; தேதி அறிவிப்பு!

வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை தொடங்கும் தேதி குறித்து.....

Velachery - Parangimalai MRTS service start in march

வேளச்சேரி-பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை - X - image

Published On :6 மார்ச் 2026, 2:15 pm IST

வேளச்சேரி-பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை தொடங்கப்படும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்களால் நீண்ட வருடங்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த வேளச்சேரி - பரங்கிமலை இடையிலான பறக்கும் ரயில் சேவை ஒருவழியாக மார்ச் 10 ஆம் தேதி தொடங்கும் என்ற அறிவிப்பை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. கடந்த 2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், 17 ஆண்டுகளாக நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல், நீதிமன்றத் தடை என பல்வேறு காரணங்களால் காலதாமதம் ஆகிக்கொண்டே இருந்தது.

இந்த நிலையில், மார்ச் 5 ஆம் தேதியில் 5 கி.மீ. தொலைவு கொண்ட இந்த ரயில் பாதையில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. மேலும், இந்த சேவை மக்கள் பயன்பாட்டுக்கு வரும் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனால், தென்சென்னையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல்களிலிருந்து மக்கள் விடுபடுவர்.

ஏற்கெனவே, எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் மறுசீரமைப்புப் பணிகள் காரணமாக மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

The date for the commencement of train service between Velachery-st thomas mount has been announced.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.