டிரோன் தொழில்நுட்பம் விவசாயிகளின் வாழ்க்கையை நவீனமயமாக்குகிறது: பிரதமர் மோடி

இந்தியாவின் மிகப்பெரிய ட்ரோன் திருவிழாவான ‘பாரத் ட்ரோன் மஹோத்சவ் 2022’ ஐ தில்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் தொடக்கி வைத்து பிரதமர் மோடி பேசினார்.
டிரோன் தொழில்நுட்பம் விவசாயிகளின் வாழ்க்கையை நவீனமயமாக்குகிறது: பிரதமர் மோடி

புது தில்லி: இந்தியாவின் மிகப்பெரிய ட்ரோன் திருவிழாவான ‘பாரத் ட்ரோன் மஹோத்சவ் 2022’ ஐ தில்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் தொடக்கி வைத்து பிரதமர் மோடி பேசினார். அவர் வேளாண் ட்ரோன் விமானிகளுடன் உரையாடினார். திறந்தவெளி  ட்ரோன் செயல் விளக்கங்களை கண்டார் மற்றும் ட்ரோன் கண்காட்சி மையத்தில் உள்ள தொழில்முனைவோர்களுடன் உரையாடினார்.

ட்ரோன் துறையில் தனக்கு உள்ள ஈர்ப்பு மற்றும் ஆர்வம் குறித்து பேசிய பிரதமர், ட்ரோன் கண்காட்சி மற்றும் தொழில்முனைவோர்களின் உற்சாகம் மற்றும் இத்துறையில் உள்ள கண்டுபிடிப்புகளால் தன்னை மிகவும் கவர்ந்ததாக கூறினார். 

மீன்பிடி தொழில் போன்ற துறைகளில் ட்ரோன்கள் சிறப்பான பலனை தரும். வயல்களில் பூச்சி மருந்து தெளிப்பது போன்ற பணிகளை ட்ரோன்கள் மிகவும் எளிமையாக செய்கின்றன என்று குறிப்பிட்டார்.

பாதுகாப்பு, பேரிடர் மேலாண்மை, விவசாயம், சுற்றுலா, திரைப்படம் மற்றும் பொழுதுபோக்கு ஆகிய துறைகளில் ட்ரோன் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தை பிரதமர் எடுத்துரைத்தார்.

டிரோன் தொழில்நுட்பம் விவசாயிகளை மேம்படுத்துவதிலும் அவர்களின் வாழ்க்கையை நவீனமயமாக்குவதிலும் முக்கிய பங்கு வகிக்கப் போகிறது என்று பிரதமர் மோடி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com