ஒடிசாவில் பாம்பு கடித்து சிங்கம் உயிரிழப்பு

ஒடிசாவில் பாம்பு கடித்து சிங்கம் உயிரிழப்பு

ஒடிசாவில் உள்ள உயிரியல் பூங்காவில் பாம்பு கடித்ததில் பெண் சிங்கம் உயிரிழந்தது. 

ஒடிசாவில் உள்ள உயிரியல் பூங்காவில் பாம்பு கடித்ததில் பெண் சிங்கம் உயிரிழந்தது. 

ஒடிசா மாநிலம், நந்தன் கண்ணன் உயிரியல் பூங்காவில் 15 வயது மதிக்கத்தக்க பெண் சிங்கம் ஒன்று வளர்க்கப்பட்டு வந்தது. இந்த சிங்கத்திற்கு நேற்று திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. உடனடியாக பூங்கா மருத்துவர்கள் சிங்கத்திற்கு தீவிர சிகிச்சை அளித்தனர். 

இருப்பினும் சிகிச்சை பலனின்றி சிங்கம் இன்று உயிரிழந்தது. சிங்கம் வசித்த தண்ணீர் அருந்தும் தொட்டி அருகே விஷப் பாம்பு ஒன்று கண்டறியப்பட்டதாகவும் எனவே பாம்பு கடித்து சிங்கம் உயிரிழந்திருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். 

எனினும், சிங்கத்தின் மரணத்திற்கான உண்மையான காரணம் பிரேத பரிசோதனைக்கு பிறகே தெரியவரும் எனக் கூறப்படுகிறது. உயிரிழந்த பெண் சிங்கம் 2015ஆம் ஆண்டு இஸ்ரேல் நாட்டில் இருந்து நந்தன் கண்ணன் உயிரியல் பூங்காவிற்கு கொண்டு வரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com