பஞ்சாப் முதல்வர் எடுத்த அதிரடி முடிவு

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், மிக அதிரடியான முடிவு ஒன்றை எடுத்து அதிரடியாக அறிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்


சண்டிகர்: பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், மிக அதிரடியான முடிவு ஒன்றை எடுத்து அதிரடியாக அறிவித்துள்ளார். மாநிலத்தில் உள்ள 424 பேருக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பை அரசு விலக்கிக் கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 சில நாள்களுக்கு முன்பு, அமைச்சர் ஒருவர் மீது எழுந்த ஊழல் புகாரைத் தொடர்ந்து அவர் உடனடியாக பதவி நீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில், மாநில அரசு சார்பில் இதுவரை பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்த 424 பேருக்கு இனி பாதுகாப்பு வழங்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில், ஏராளமான ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகள், மதத்தலைவர்கள், அரசியல் தலைவர்களும் அடங்குவர்.

ஏற்கனவே ஏப்ரல் மாதம், பஞ்சாப் அரசு, முன்னாள் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியின் குடும்பத்தினர், கேப்டன் அமரீந்தர் சிங்கின் மகன் உள்ளிட்ட 184 பேருக்கு அளிக்கப்பட்டு வந்த அரசுப் பாதுகாப்பை நீக்கிக் கொள்வதாக அறிவித்த நிலையில், இன்று இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com