இந்தியா திராவிடர்களுக்கும், ஆதிவாசிகளுக்கும்தான் சொந்தம்: ஒவைசி

இந்தியா தனக்கோ, தாக்கரேக்களுக்கோ அல்லது மோடி, ஷா-களுக்கோ சொந்தம் கிடையாது என அகில இந்திய மஜ்லீஸ் கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசி தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read


இந்தியா தனக்கோ, தாக்கரேக்களுக்கோ அல்லது மோடி, ஷா-களுக்கோ சொந்தம் கிடையாது என அகில இந்திய மஜ்லீஸ் கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசி தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரத்தில் நடைபெற்ற பேரணியில் இதுபற்றி அவர் பேசியதாவது:

"இந்தியா தனக்கோ, தாக்கரேக்களுக்கோ அல்லது மோடி, ஷா-களுக்கோ சொந்தம் கிடையாது. இந்தியா எவருக்கேனும் சொந்தம் என்றால் அது திராவிடர்களுக்கும், ஆதிவாசிகளுக்கும்தான். பாஜக-ஆர்எஸ்எஸ் எல்லாம் முகலாயர்களுக்குப் பிறகுதான் வரும்.

ஆப்பிரிக்கா, ஈரான், மத்திய ஆசியா, கிழக்கு ஆசியா ஆகிய பகுதிகளிலிருந்து மக்கள் இடம்பெயர்ந்த பிறகுதான் இந்தியா உருவாக்கப்பட்டது" என்றார்.

இதன்பிறகு, தேசியவாத காங்கிரஸ், சிவசேனை, பாஜக, சமாஜவாதி உள்ளிட்ட கட்சிகளை ஒருசேர விமர்சித்து அவர் பேசியதாவது:

"பாஜக, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ், சமாஜவாதி கட்சிகள் எல்லாம் மதச்சார்பற்ற கட்சிகள். அவர்கள் சிறைக்குச் செல்லக் கூடாது என நினைப்பார்கள். ஆனால், முஸ்லிம் கட்சியைச் சேர்ந்தவர் சிறைக்குச் சென்றால் பரவாயில்லை.

சஞ்சய் ரௌத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்பதை வலியுறுத்துவதற்காக சரத் பவார் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தார். இதே செயலை நவாப் மாலிக் விஷயத்தில் சரத் பவார் ஏன் செய்யவில்லை?

சஞ்சய் ரௌத்தைவிட குறைவானவரா நவாப் மாலிக்? நவாப் மாலிக்குக்காக நீங்கள் ஏன் பேசவில்லை சரத் பவார்? அவர் முஸ்லிம் என்பதாலயா? சஞ்சய் மற்றும் நவாப் சமமற்றவர்களா?" என்றார் ஒவைசி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com