ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் புதிய உயரங்களை எட்டும்: பிரதமர் மோடி நம்பிக்கை

'நம் நாட்டில் இந்த மொழிப் பன்முகத்தன்மையை வலுப்படுத்துவதற்காக உழைக்கும் பலர் நம் நாட்டில் உள்ளனர்'
பிரதமர் மோடி
பிரதமர் மோடி

பிரதமா் நரேந்திர மோடி பதவியேற்றதில் இருந்து ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுக்கிழமை மனதின் குரல் வானொலி நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். அதில் அந்த மாதம் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள், சாமானிய மக்களின் சாதனைகள், நாட்டில் சிறப்பாக செயல்படுத்தப்படும் திட்டங்கள் உள்பட பல்வேறு கருத்துகளை பிரதமா் பகிர்ந்து கொள்வது வழக்கம்.

அந்த வகையில், இன்று பேசிய மோடி, "எதிர்காலத்தில் இந்தியாவில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் புதிய உயரங்களை எட்டும் என நம்புகிறேன். சரியான வழிகாட்டுதல் ஒரு தொடக்கத்தை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும். இந்தியாவில் இதுபோன்ற பல வழிகாட்டிகள் உள்ளனர். அவர்கள் நாட்டில் ஸ்டார்ட்அப்களுக்கு உதவ உறுதி பூண்டுள்ளனர். 

வெற்றிகரமான சுயதொழில் முனைவோர் மட்டுமின்றி ஊரகப் பகுதியில் தங்கியிருந்து பிற இளைஞர்களையும் சுயதொழில் முனைவோராக வளர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளார் தமி்ழகத்தை சேர்ந்த ஸ்ரீதர் வேம்பு.

இந்தியாவில் வெவ்வேறு மொழிகள், பேச்சுவழக்குகள் உள்ளன. நம் நாட்டில் இந்த மொழிப் பன்முகத்தன்மையை வலுப்படுத்துவதற்காக உழைக்கும் பலர் நம் நாட்டில் உள்ளனர். உதாரணமாக, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஸ்ரீபதி டுடு என்பவர் இந்திய அரசியலமைப்பை சந்தாலி சமூகத்திற்காக 'ஓல் சிக்கி' மொழியில் மொழிபெயர்த்துள்ளார்.

உத்தரகண்ட் மாநிலத்தில் ஆயிரக்கணக்கான யாத்ரீகர்கள் வருகை தரும் சார் தாம் யாத்திரை நடைபெற்று வருகிறது. சில யாத்ரீகர்களால் வீசப்படும் குப்பைகளை கண்டு கேதார்நாத் யாத்ரீகர்கள் வருத்தமடைந்ததை நான் பார்த்திருக்கிறேன். சில யாத்ரீகர்கள் தங்கள் யாத்திரையின் போது அவர்கள் தங்கியிருக்கும் பகுதிகளை சுத்தம் செய்கிறார்கள்.

சமீபத்தில் நான் ஜப்பானுக்குச் சென்றிருந்தபோது, இந்தியாவின் மீது அபரிமிதமான அன்பு கொண்ட ஜப்பானின் சில அற்புதமான ஆளுமைகளைச் சந்தித்தேன். அவர்களில் ஒருவர் ஹிரோஷி கொய்கே. கலை இயக்குநரான அவர், இந்தியா, கம்போடியா மற்றும் இந்தோனேசியா உள்ளிட்ட 9 நாடுகளில் நிகழ்த்தப்பட்ட 'மகாபாரத் திட்டத்தை' இயக்கியவர்" என்றார்.

மனதின் குரல் நிகழ்ச்சியை ஹிமாச்சல் பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாக்கூர், பாஜக தேசிய தலைவர் நட்டா ஆகியோர் குருகிராமில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவாறு கேட்டனர். மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் அகமதாபாத்திலிருந்தும் தர்மேந்திர பிரதான் தில்லியிலிருந்தும் மோடியின் உரையை கேட்டார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com