பொருளாதாரத்தை மூழ்கடித்தது தான் பணமதிப்பிழப்பின் சாதனை: ராகுல் காந்தி

நாட்டின் பொருளாதாரத்தை மூழ்கடித்தது தான் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் ஒரே சாதனை என்று காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். 
பொருளாதாரத்தை மூழ்கடித்தது தான் பணமதிப்பிழப்பின் சாதனை: ராகுல் காந்தி

புதுதில்லி: நாட்டின் பொருளாதாரத்தை மூழ்கடித்தது தான் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் ஒரே சாதனை என்று காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். 

பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் மதிப்பிழப்பு செய்யப்படுவதாக பிரதமா் நரேந்திர மோடி கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பா் 8-ஆம் தேதி அறிவித்தாா். இணையவழி பணப் பரிவா்த்தனையை ஊக்குவிக்கவும் கருப்புப் பணத்தை ஒழிக்கவும் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக மோடி அறிவித்தாா்.

இந்நிலையில், 2016 ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் ரூ.500, ரூ.2000 கள்ள நோட்டுகளின் பெருமளவு உயர்ந்துள்ளதாக செய்திகள் வெளியானது. 

2021 -இல் வங்கிகளால் கண்டுபிடிக்கப்பட்ட ரூ.2000 கள்ளநோட்டுகளின் எண்ணிக்கை 8,798 ஆக இருந்தது. இது, 2022 இல் 54 சதவிகிதம் உயர்ந்து 13.604 ஆக உயர்ந்துள்ளது. 
 
2021 இல் வங்கிகளால் கண்டுபிடிக்கப்பட்ட ரூ.500 கள்ளநோட்டுகளின் எண்ணிக்கை 39,453 ஆக இருந்தது. இது, 2022 -இல் 101.9 சதவிகிதம் உயர்ந்து 79.699 -ஆக உயர்ந்துள்ளது.

பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின் அதிக அளவில் அச்சடிக்கப்பட்டது ரூ.500 கள்ளநோட்டு என்று ஆர்பிஐ தெரிவித்துள்ளது.

இந்நிலையில், காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி சுட்டுரையில் வெளியிட்டுள்ள பதிவில், நாட்டின் பொருளாதாரத்தை மூழ்கடித்தது தான் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் ஒரே  துரதிர்ஷ்டவசமான சாதனை என்று  குற்றம்சாட்டியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com