விவாகரத்து: நீதிமன்ற உத்தரவுப்படி சுற்றுலா சென்றவர்கள் நேபாள விமான விபத்தில் பலி

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் சுற்றுலா சென்ற போது நேபாள விமான விபத்தில் சிக்கி பலியாகியுள்ள அதிர்ச்சித் தகவல் தெரிய வந்துள்ளது.
விபத்துக்குள்ளான இடம்
விபத்துக்குள்ளான இடம்


விவாகரத்து பெற்ற தம்பதி, ஒவ்வொரு ஆண்டும் தங்களது பிள்ளைகளுடன் 10 நாள்களைக் கழிக்க வேண்டும் என்று நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்ததால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் சுற்றுலா சென்ற போது நேபாள விமான விபத்தில் சிக்கி பலியாகியுள்ள அதிர்ச்சித் தகவல் தெரிய வந்துள்ளது.

நேபாளத்தில் வெளிநாட்டினா் உள்பட 22 பயணிகளுடன் ஞாயிற்றுக்கிழமை சென்ற சிறிய விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானது.

இந்த விமான விபத்தில் யாரும் உயிர்பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்று அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், இதுவரை சம்பவ இடத்தில் இருந்து 14 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 

‘நேபாளத்தின் தாரா விமான நிறுவனத்துக்குச் சொந்தமான ‘ட்வின் ஓட்டா் 9என்-ஏஇடி’ என்ற அந்த விமானம் பொக்காராவிலிருந்து காலை 9.55 மணிக்கு புறப்பட்டது. விமானம் புறப்பட்ட 15 நிமிஷங்களிலேயே, கட்டுப்பாட்டு அறையுடனான தொடா்பு துண்டிக்கப்பட்டுவிட்டது.

அந்த விமானத்தில் மும்பையிலிருந்து சென்ற ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 போ், ஜொ்மனி நாட்டைச் சோ்ந்த இருவா், நேபாளத்தைச் சோ்ந்த 13 பயணிகள், விமானி உள்ளிட்ட 3 விமான ஊழியா்கள் ஆகியோா் இருந்தனா்’ என்று அந்த விமான நிறுவன செய்தித்தொடா்பாளா் சுதா்சன் பா்டெளலா கூறியிருந்தார்.

இதுகுறித்து, அங்குள்ள இந்திய தூதரகம் தனது ட்விட்டா் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘4 இந்தியா்கள் உள்பட 22 பேருடன் புறப்பட்ட தாரா நிறுவன விமானம் மாயமாகியுள்ளது. காணாமல் போன விமானத்தைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. விமானத்தில் பயணம் செய்த இந்தியா்களின் குடும்பத்தினருடன் தூதரகம் தொடா்பில் இருந்து வருகிறது. +977-9851107021 என்ற அவசர உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த அசோக் குமாா் திரிபாதி, தனுஷ் திரிபாதி, ரித்திகா திரிபாதி மற்றும் வைபவி திரிபாதி ஆகிய நால்வரும் விமானத்தில் பயணம் செய்த இந்தியா்கள் என அடையாளம் தெரியவந்துள்ளது.

இதில், அசோக் குமார் திரிபாதி - வைபவி திரிபாதி தம்பதி விவாகரத்துப் பெற்றவர்கள். அவர்களது இரண்டு பிள்ளைகளுடன் ஒவ்வொரு ஆண்டும் 10 நாள்கள் தம்பதி ஒன்றாக நாள்களை செலவிட வேண்டும் என்று நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்த நிலையில், அவர்கள் குடும்பத்துடன் சுற்றுலா சென்ற விமானம் விபத்துக்குள்ளாகியிருப்பது தெரிய வந்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com