கரோனாவில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிதியுதவி: பிரதமர் தொடங்கி வைத்தார்

கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிதியுதவி உள்ளிட்ட குழந்தைகளுக்கான திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.
பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி

கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிதியுதவி உள்ளிட்ட குழந்தைகளுக்கான திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.

கரோனா பேரிடரில் பெற்றோர்களை இழந்துள்ள குழந்தைகளுக்கு நிதியுதவி, கல்வி உதவி வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது.

இந்த திட்டத்தை இன்று தொடங்கி வைத்த பிரதமர் மோடி பேசியதாவது:

“கரோனா பேரிடரில் குடும்ப உறுப்பினரை இழந்துள்ள கஷ்டம் எப்படிப்பட்டது என்பது எனக்கு தெரிகிறது. இன்று தொடங்கி வைக்கப்பட்ட திட்டங்கள் கரோனாவால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கானது.

இந்த குழந்தைகள் மேற்படிப்பு மேற்கொள்ள நிதியுதவி தேவைப்பட்டால் பிஎம் கேர்ஸ் மூலம் ஏற்பாடு செய்து தரப்படும். இவர்களின் தினசரி தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள மாதம்தோறும் ரூ. 4,000 வழங்கப்படும்.

பள்ளிப் படிப்பிற்கு பிறகு எதிர்கால கனவுகளை அடைய அதிகளவிலான பணம் தேவைப்படும். பெற்றோரை இழந்த 18 முதல் 23 வயதுடைய இளைஞர்களுக்கு மாதம்தோறும் ஊக்கத் தொகை வழங்கப்படும். 23 வயதிற்கு பிறகு ரூ. 10 லட்சம் வழங்கப்படும்.

இவர்களுக்கு ஆயுஷ்மான் மருத்துவக் காப்பீடு வழங்கப்படும். இதன்மூலம் ரூ. 5 லட்சம் வரை இலவச மருத்து சேவைகளை பெற முடியும்.

பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நாட்டு மக்கள் அனைவரும் துணை நிற்பார்கள். அவர்கள் மனரீதியாக பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்வது நமது கடமை. பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நிதியுதவி வழங்குவது சிறு ஆறுதலாக இருக்கின்றது” என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com