
தகவல் தொழில்நுட்ப உலகில் மிகப்பெரிய புரட்சி என்று அறிமுகம் செய்யப்பட்டு, இந்தியாவில் 5ஜி சேவை தொடங்கி ஒரே மாதத்தில் 10 லட்சம் 5ஜி பயனாளர்களைப் பெற்று ஏர்டெல் நிறுவனம் அசத்தியுள்ளது.
வணிக ரீதியாக 5ஜி சேவையைத் தொடங்கி ஒரு மாதத்துக்குள்ளேயே, 10 லட்சத்துக்கும் மேற்பட்ட 5ஜி பயனாளர்களை ஏர்டெல் நிறுவனம் பெற்றிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் தில்லி, மும்பை, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், சிலிகுரி, நாக்பூர், வாராணசி உள்ளிட்ட நகரங்களில் கடந்த மாதம் ஏர்டெல் நிறுவனம் 5ஜி சேவையை அறிமுகப்படுத்தியது.
புதிய தொலைத்தொடர்புகளை உருவாக்குதல் உள்ளிட்டப் பணிகளில் நிறுவனம் தீவிரமாக செயல்பட்டு வருவதன் மூலம், இந்த நகரங்களில் படிப்படியாக 5ஜி சேவை விரிவாக்கம் செய்யப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளது.
இது ஆரம்ப நாள்கள்தான், எனினும் பயனாளர்களிடமிருந்து வரும் கருத்துகள் ஊக்கமளிப்பதாக உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.