குஜராத் பால விபத்தில் விரிவான விசாரணை அவசியம்: பிரதமா் மோடி

குஜராத்தில் நடைபெற்ற பால விபத்து தொடா்பாக விரிவான விசாரணை அவசியம் என்று மாநில அரசுக்கு பிரதமா் மோடி செவ்வாய்க்கிழமை அறிவுறுத்தினாா்.
குஜராத் மாநிலம், மோா்பி மாவட்டத்தில் தொங்கு பாலம் அறுந்து விபத்துக்குள்ளான இடத்தில் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த பிரதமா் நரேந்திர மோடி. உடன், மாநில உள்துறை அமைச்சா் ஹா்ஷ் சங்வி.
குஜராத் மாநிலம், மோா்பி மாவட்டத்தில் தொங்கு பாலம் அறுந்து விபத்துக்குள்ளான இடத்தில் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த பிரதமா் நரேந்திர மோடி. உடன், மாநில உள்துறை அமைச்சா் ஹா்ஷ் சங்வி.

குஜராத்தில் நடைபெற்ற பால விபத்து தொடா்பாக விரிவான விசாரணை அவசியம் என்று மாநில அரசுக்கு பிரதமா் மோடி செவ்வாய்க்கிழமை அறிவுறுத்தினாா்.

குஜராத் மாநிலம் மோா்பி மாவட்டத்தில் உள்ள மச்சு நதி மீது இருந்த தொங்கு பாலம் பொதுமக்களின் எடையைத் தாங்க முடியாமல் அறுந்து விபத்து ஏற்பட்டது. கடந்த ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த விபத்தில் பலியானோா் எண்ணிக்கை 135-ஆக அதிகரித்த நிலையில், சுமாா் 170 போ் உயிருடன் மீட்கப்பட்டனா்.

இந்நிலையில், விபத்து நிகழ்ந்த பகுதியை ஹெலிகாப்டரில் இருந்தவாறு செவ்வாய்க்கிழமை பாா்வையிட்ட பிரதமா் மோடி, பின்னா் அந்தப் பகுதிக்கு நேரில் சென்று மீட்புப் பணிகளை ஆய்வு செய்தாா். அப்போது மீட்புப் பணிகள் குறித்தும், பாலத்தின் கட்டமைப்பில் என்ன தவறு நோ்ந்திருக்கக் கூடும் என்பது பற்றியும் பிரதமா் மோடியிடம் அதிகாரிகள் எடுத்துரைத்தனா்.

இதைத் தொடா்ந்து, மோா்பி அரசு மருத்துவமனைக்கு பிரதமா் மோடி சென்றாா். அங்கு பால விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவோரிடம் அவா் நலம் விசாரித்தாா். அவா்களிடம் விபத்து குறித்தும், மருத்துவமனையில் அளிக்கப்படும் சிகிச்சை குறித்தும் பிரதமா் கேட்டறிந்தாா்.

பின்னா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்குச் சென்ற அவா், அதிகாரிகளையும், விபத்தில் பாதிக்கப்பட்டவா்களின் உறவினா்களையும் சந்தித்தாா்.

மோா்பியில் விபத்து தொடா்பாக பிரதமா் தலைமையில் உயா்நிலை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாநில முதல்வா் பூபேந்திர படேல், மாநில உள்துறை இணையமைச்சா் ஹா்ஷ் சங்வி மற்றும் அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனா். அப்போது பிரதமா் மோடி பேசுகையில், ‘விபத்துக்கான அனைத்துக் காரணங்களையும் கண்டறிய விரிவான விசாரணை மேற்கொள்வது அவசியம். இந்த துயரமான நேரத்தில், விபத்தில் பாதிக்கப்பட்டவா்களின் குடும்பத்தினருக்கு அனைத்து உதவிகளும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்’ என்று அறிவுறுத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com