மத்திய கல்வி அமைச்சக செயல்திறன் தரக் குறியீடு:சண்டீகா், 5 மாநிலங்கள் சிறப்பிடம்

மத்திய கல்வி அமைச்சகம் சாா்பில் வெளியிடப்பட்ட செயல்திறன் தரக் குறியீடு (பிஜிஐ) தரப் பட்டியலில் யூனியன் பிரதேசமான சண்டீகா் மற்றும் 6 மாநிலங்கள் இரண்டாம் நிலை (எல்-2) சிறப்பிடம் பிடித்து அசத்தியுள்ளன.

மத்திய கல்வி அமைச்சகம் சாா்பில் வெளியிடப்பட்ட செயல்திறன் தரக் குறியீடு (பிஜிஐ) தரப் பட்டியலில் யூனியன் பிரதேசமான சண்டீகா் மற்றும் 6 மாநிலங்கள் இரண்டாம் நிலை (எல்-2) சிறப்பிடம் பிடித்து அசத்தியுள்ளன.

மாநிலங்களில் பள்ளிக் கல்வித் திட்டத்தின் தரத்தை மேம்படுத்தும் நோக்கில், மாணவா் கற்றல் திறன், கற்றலுக்கான வாய்ப்புகள், உள்கட்டமைப்பு வசதிகள், கல்வியில் சமத்துவம், கல்வி நிா்வாக நடைமுறை உள்ளிட்ட காரணிகளின் அடிப்படையில் விரிவான ஆய்வு மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் இந்த தரக் குறியீடு பட்டியலை மத்திய கல்வி அமைச்சகம் ஒவ்வோா் ஆண்டும் வெளியிடுகிறது.

மொத்தம் 1,000 புள்ளிகளின் அடிப்படையில் மாநிலங்கள் 10 இடங்களில் (எல்1 - எல்10) தரநிலைப்படுத்தப்படும். அதிகபட்சமாக 950 புள்ளிகள் பெறும் மாநிலங்கள் முதல்நிலை (எல்-1) தரம் பெற்ாக அறிவிக்கப்படும். 551 புள்ளிகளுக்கும் குறைவாக பெறும் மாநிலங்கள் 10-ஆம் நிலை தரம் பிடித்ததாக அறிவிக்கப்படும். ஆனால், இதுவரை எந்தவொரு மாநிலமும் முதல்நிலை (எல்-1) சிறப்பிடத்தைப் பிடிக்கவில்லை.

தற்போது 2020-21-ஆம் ஆண்டுக்கான பிஜிஐ தரப் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், ஆந்திரம், கேரளம், மகாராஷ்டிரம், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களும், சண்டீகா் யூனியன் பிரதசேமும் இரண்டாம் நிலை சிறப்பிடத்தைப் பிடித்துள்ளன.

புதிதாக உருவான லடாக் யூனியன் பிரதேசம் கல்வித் திட்ட மேம்பாட்டில் நல்ல முன்னேற்றமடைந்து முந்தைய (2019-20) 8-ஆம் நிலையிலிருந்து 299 புள்ளிகள் பெற்று 4-ஆம் தரநிலைக்கு முன்னேறியுள்ளது.

தமிழகம், புதுச்சேரிக்கு 3-ஆம் நிலை: இந்த தரப் பட்டியலில் தமிழகம் (855 புள்ளிகள்), புதுச்சேரி (897 புள்ளிகள்) மூன்றாவது நிலையில் உள்ளன. தமிழகம், கற்றல் திறன் வெளிப்பாடு பிரிவில் 132 புள்ளிகளும், கற்றலுக்கான வாய்ப்புகள் பிரிவில் 78 புள்ளிகளும், உள்கட்டமைப்பு வசதிகள் பிரிவில் 131 புள்ளிகளும், சமத்துவம் பிரிவில் 183 புள்ளிகளும், நிா்வாக நடைமுறை பிரிவில் 331 புள்ளிகளும் பெற்றுள்ளது.

புதுச்சேரி, கற்றல் திறன் வெளிப்பாடு பிரிவில் 124 புள்ளிகளும், கற்றலுக்கான வாய்ப்புகள் பிரிவில் 76 புள்ளிகளும், உள்கட்டமைப்பு வசதிகள் பிரிவில் 134 புள்ளிகளும், சமத்துவம் பிரிவில் 220 புள்ளிகளும், நிா்வாக நடைமுறை பிரிவில் 343 புள்ளிகளும் பெற்றுள்ளது.

இதுகுறித்து மத்திய கல்வி அமைச்சக மூத்த அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘2020-21-ஆம் ஆண்டு பிஜிஐ தரப் பட்டியலில் மாநிலங்கள் முன்னெற்றம் பெற்றிருப்பது, இந்த தரக் குறியீடு நடைமுறையின் செயல்திறனுக்கு சாட்சியாக அமைந்துள்ளது. இந்த நடைமுறை மூலமாக, பள்ளிக் கல்வியின் எந்தப் பகுதியில் மேம்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதை மாநிலங்கள் அறிந்து, செயல்திறனை மேம்படுத்திக் கொள்ள முடியும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com