எம்.எல்.ஏ , எம்.பி.க்களின் உறவினர்களுக்கு சீட் கிடையாது: பாஜக

பதவியில் இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் உறவினர்களுக்கு குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்க வேண்டாம் என பாஜக முடிவு செய்துள்ளது.

பாஜகவின் இந்த முடிவினை குஜராத் மாநில பாஜக தலைவர் சி.ஆர்.பாட்டீல் தெரிவித்துள்ளார். குஜராத்தின் பரூச் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் மன்சுக் வசவா அவரது மகளுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்புக் கேட்ட் நிலையில் பாஜக தரப்பில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மன்சுக் வசவா போன்றே பலரும் தங்களது உறவினர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்புக் கேட்டதாக கூறப்படுகிறது. 

இது குறித்து குஜராத் பாஜக தலைவர் சி.ஆர்.பாட்டீல் கூறியதாவது: பதவியில் உள்ள எம்.எல்.ஏ மற்றும் எம்.பி.க்களின் உறவினர்களுக்குத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டாம் என பாஜக முடிவு செய்துள்ளது. குஜராத்தில் உள்ள 182 தொகுதிகளுக்கும் ஒவ்வொரு தொகுதியில் இருந்து 3 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களில் ஒருவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட உள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com