டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

இட ஒதுக்கீடு முறையை மறு ஆய்வு செய்ய வேண்டும்: நீதிபதி எபெலா எம்.திரிவேதி

இடஒதுக்கீடு முறையை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று உயர்சாதி ஏழைகளுக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என தீர்ப்பு வழங்கிய 3 நீதிபதிகளில் ஒருவரான எபெலா எம்.திரிவேதி கருத்து தெரிவித்துள்ளார். 

News image
Updated On :7 நவம்பர் 2022, 6:35 am

DIN



புதுதில்லி: இடஒதுக்கீடு முறையை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று உயர்சாதி ஏழைகளுக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என தீர்ப்பு வழங்கிய 3 நீதிபதிகளில் ஒருவரான எபெலா எம்.திரிவேதி கருத்து தெரிவித்துள்ளார். 

பொருளாதார ரீதியில் நலிவடைந்த பொதுப் பிரிவினருக்கான 10 சதவிகித இடஒதுக்கீடு வழங்கும் மசோதா 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து, 10 சதவீத இட ஒதுக்கீடு அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை கட்டமைப்பை மீறும் வகையில் உள்ளதாகக் கூறி, உச்சநீதிமன்றத்தில் 40க்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. 

இந்த விவகாரத்தில் கடந்த செப்டம்பரில் ஆறரை நாள்கள் தொடா்ந்து விசாரணை நடைபெற்றது. அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், தீா்ப்பை ஒத்திவைப்பதாக செப்டம்பா் 27-இல் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

இந்நிலையில், தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, எஸ்.ரவீந்திர பட், பெலா எம்.திரிவேதி, ஜே.பி.பாா்திவாலா ஆகியோா் அடங்கிய அரசியல் சாசன அமர்வு திங்கள்கிழமை (நவ.7) பொருளாதார ரீதியில் நலிவடைந்த பொதுப் பிரிவினருக்கான 10% இட ஒதுக்கீடு செல்லும் என நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, எபெலா எம்.திரிவேதி, ஜே.பி.பாா்திவாலா ஆகிய மூவரும் தீர்ப்பளித்துள்ளனர். பொருளாதாரத்தில் நலிவடைந்த உயர் வகுப்பினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10% இட ஒதுக்கீடு வழங்க அரசியலமைப்புச் சட்டத்தின் 103-ஆவது பிரிவில் ஏற்படுத்திய திருத்தம் செல்லும் என்று தீர்ப்பு வழங்கியுள்ளனர். 

பெலா மாதுர்யா திரிவேதி கருத்து: இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், சமுதாயத்தின் நலனை கருத்தில் கொண்டு இட ஒதுக்கீடு முறையை மறு ஆய்வுக்கு உள்படுத்த வேண்டும் என்று இடஒதுக்கீடு செல்லும் என தீர்ப்பு வழங்கிய 3 நீதிபதிகளில் ஒருவரான எபெலா எம்.திரிவேதி கருத்து தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.