உ.பி.யில் பெண்கள் மீது சரமாரி தாக்குதல் நடத்திய காவலர்கள்: எதற்கு?

காவல்துறையினர் பெண்களை லத்தியால் அடிப்பதும், சரமாரியாக தாக்குதல் நடத்துவதுமான அத்துமீறல் சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது. 
உ.பி.யில் பெண்கள் மீது சரமாரி தாக்குதல் நடத்திய காவலர்கள்: எதற்கு?

காவல்துறையினர் பெண்களை லத்தியால் அடிப்பதும், சரமாரியாக தாக்குதல் நடத்துவதுமான அத்துமீறல் சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது. 

உத்தரப் பிரதேசத்தின் ஜலால்பூர் பகுதியில் அம்பேத்கர் சிலை மர்ம நபர்களால் உடைக்கப்பட்டுள்ளது. இதைக் கண்டித்து அப்பகுதியில் உள்ள மக்கள் பெருமளவில் போராட்டம் நடத்தியுள்ளனர். 

இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகின்றது. 

அம்பேத்கரின் சிலை உடைக்கப்பட்டதைக் கண்டித்து ஆர்ப்பாட்டக்காரர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். கலைந்துசெல்லுமாறு உத்தரவிட்டனர். 

ஆனால், காவல்துறையினருடன் பொதுமக்கள் தொடர்ந்து வாக்குவாதம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டனர். பெண்கள் கூட்டாக இணைந்து காவலர்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். 

இதனால், ஆத்திரமடைந்த காவல்துறையினர் போராட்டக்காரர்கள் மீது லத்தி தாக்குதல் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களையும் காவல்துறையினர் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். 

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com