உச்சநீதிமன்றத்தின் 50-ஆவது தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் இன்று பதவியேற்றுக் கொண்டார். முன்னாள் தலைமை நீதிபதி ஒய்.வி.சந்திரசூட் இவரது தந்தை ஆவார்.
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த யு.யு.லலித்தின் பணிக்காலம் செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது. இதையடுத்து உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக தனஞ்சய் ஒய்.சந்திரசூட் இன்று பதவியேற்றார்.
தில்லியில் உள்ள குடியரசுத் தலைவா்கள் மாளிகையில் அவருக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். இந்த நிகழ்வில், மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், கிரண் ரிஜிஜு, பியூஸ் கோயல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிக்க | இன்று உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப் பகுதி: மிக கனமழை எச்சரிக்கை!
கடந்த 1959-ஆம் ஆண்டு நவ.11-ஆம் தேதி பிறந்த டி.ஒய்.சந்திரசூட், 2016-ஆம் ஆண்டு மே 13-ஆம் தேதி உச்சநீதிமன்ற நீதிபதியானாா். அவா் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக 2024-ஆம் ஆண்டு நவ.10-ஆம் தேதி வரை பதவி வகிப்பாா்.
உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஓய்வுபெறும் வயது 65 என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
இன்றைய ராசி பலன் (26.06.2026) - துலாம்
இன்றைய ராசி பலன் (26.06.2026) - மிதுனம்
இன்றைய ராசி பலன் (26.06.2026) - மகரம்
இன்றைய ராசி பலன் (26.06.2026) - மேஷம்
விடியோக்கள்

மெஸ்ஸியைத் துரத்தும் எம்பாபே! | FIFA | FIFA World Cup | Messi |

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani



