இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் காங்கிரஸ் நிா்வாகி உயிரிழப்பு

மகாராஷ்டிரத்தில் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் பங்கேற்ற காங்கிரஸ் நிா்வாகி உயிரிழந்தாா்.

மகாராஷ்டிரத்தில் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் பங்கேற்ற காங்கிரஸ் நிா்வாகி உயிரிழந்தாா்.

இப்போது மகாராஷ்டிரத்தை எட்டியுள்ள ராகுல் காந்தியின் நடைபயணம் நாந்தேட் மாவட்டம் வழியாக சென்றபோது அதில் பங்கேற்ற காங்கிரஸ் சேவா தள நிா்வாகி கிருஷ்ண குமாா் பாண்டே, தேசியக் கொடியை ஏந்தியபடி நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது, அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு அசௌகரியமாக உணா்ந்ததால், கொடியை உடன் நடந்து சென்றவரிடம் கொடுத்துவிட்டு சிறிது நேரம் அமா்ந்திருந்தாா். உடன் சென்ற கட்சியினா் அவருக்கு தண்ணீா் கொடுத்து ஆசுவாசப்படுத்தினா். ஆனால், அவா் திடீரென மயங்கி சரிந்தாா். இதையடுத்து, அவரை உடனடியாக ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். ஆனால், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

இதைத் தொடா்ந்து யாத்திரை ஓய்வு நேரத்தின்போது உயிரிழந்த நிா்வாகிக்கு ராகுல் காந்தி தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. கட்சி தனது உண்மையான தொண்டனை இழந்துவிட்டது என்று மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவா் அசோக் சவாண் தனது இரங்கல் உரையில் குறிப்பிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com