குஜராத் தேர்தல்: பாஜக வேட்பாளராக களமிறங்கும் கிரிக்கெட் வீரரின் மனைவி

நடைபெற உள்ள குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் பிரபல கிரிக்கெட் வீரரின் மனைவி பாஜக வேட்பாளராக களம் இறங்கியுள்ளா நடைபெற உள்ள குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் பிரபல கிரிக்கெட் வீரரின் மனைவி பாஜக வேட்பாளராக
குஜராத் தேர்தல்: பாஜக வேட்பாளராக களமிறங்கும் கிரிக்கெட் வீரரின் மனைவி

நடைபெற உள்ள குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் பிரபல கிரிக்கெட் வீரரின் மனைவி பாஜக வேட்பாளராக களம் இறங்கியுள்ளார். 

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் டிசம்பர் மாதத் தொடக்கத்தில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தல் வெற்றிக்காக அரசியல் கட்சிகள் தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜா பாஜகவின் சார்பில் போட்டியிட உள்ளார். இதற்கான அறிவிப்பை பாஜக வெளியிட்டுள்ளது. 

குஜராத்தின் ஜாம்நகர் வடக்கு தொகுதியில் போட்டியிடும் ரிவாபா ஜடேஜா கடந்த 2019ஆம் ஆண்டு பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கெனவே இந்தத் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த தர்மேந்திரசிங் ஜடேஜா மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்ததால் அவருக்கு தற்போது போட்டியிட வாய்ப்பளிக்கப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

சமூக பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ள ரிவாபா ஜடேஜாவிற்கு வெற்றி வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கும் என பாஜகவினர் தெரிவித்து வருகின்றன. 

ரவீந்திர ஜடேஜாவை 2016ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட ரிவாபா குஜராத் மாநிலத்தின் ரிச்சா சோலன்கி பகுதியில் பிறந்தவராவார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com