ஃபட்னவீஸை புகழ்ந்த சஞ்சய் ரௌத்! மோடி, அமித் ஷாவையும் சந்திக்கிறார்!

மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் சில நல்ல முடிவுகளை எடுத்துள்ளார் என்றும் அவரையும் பிரதமர் மோடி, அமித் ஷாவையும் விரைவில் சந்திக்கவுள்ளதாகவும் சிவசேனை எம்.பி. சஞ்சய் ரௌத் தெரிவித்துள்ளார்.
ஃபட்னவீஸை புகழ்ந்த சஞ்சய் ரௌத்! மோடி, அமித் ஷாவையும் சந்திக்கிறார்!

மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் சில நல்ல முடிவுகளை எடுத்துள்ளார் என்றும் அவரையும் பிரதமர் மோடி, அமித் ஷாவையும் விரைவில் சந்திக்கவுள்ளதாகவும் சிவசேனை எம்.பி. சஞ்சய் ரௌத்(உத்தவ் தரப்பு) தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்திள்ளது. 

மும்பை கோரேகாவ் பத்ரா சால் குடியிருப்பு சீரமைப்பில் மோசடி நடந்ததாகக் கூறி சிவசேனை எம்.பி. சஞ்சய் ரௌத் கடந்த ஜூலை மாதம் கைது செய்யப்பட்டார். 

சஞ்சய் ரௌத் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்தது. நேற்று இந்த வழக்கின் விசாரணையில், சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் என்பதற்கு முகாந்திரமே இல்லை என்று கூறி அமலாக்கத்துறைக்கு கண்டனம் தெரிவித்து சஞ்சய் ரௌத்தை விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. 

சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட பின்னர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த சஞ்சய் ரௌத், 'நான் இன்று உத்தவ் தாக்கரேவை சந்திக்க இருக்கிறேன். தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரும் என்னை சந்திக்க அழைத்துள்ளார். எனக்கு யார் மீதும் எந்த புகாரும் இல்லை. இதுபோன்ற அரசியல் பழிவாங்கலை நாங்கள் பார்த்ததில்லை. நான் எந்த மத்திய புலனாய்வு அமைப்புகளையும் குற்றம் சொல்லமாட்டேன். 

மகாராஷ்டிரத்தில் புதிய அரசு அமைந்துள்ளது. அவர்களின் சில நல்ல முடிவுகளை நான் வரவேற்கிறேன். துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் சில நல்ல முடிவுகளை எடுத்துள்ளார். மாநிலத்தை துணை முதல்வர் ஃபட்னவீஸ்தான் நடத்துகிறார், அவர்தான் மாநிலத்தை வழிநடத்துகிறார். 

இன்று உத்தவ் தாக்கரே, சரத் பவாரை சந்திக்கிறேன். தொடர்ந்து, மக்கள் பணி தொடர்பாக 2-4 நாட்களில் துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸை சந்திக்கவிருக்கிறேன். தில்லி சென்று பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் சந்திப்பேன்' என்று கூறியுள்ளார். 

சஞ்சய் ரௌத் கைது செய்யப்படுவதற்கு முன்னதாக பாஜகவை கடுமையாக விமரிசித்து வந்த நிலையில் தற்போது தேவேந்திர ஃபட்னவீஸை புகழ்வதும் பிரதமர் மோடி, அமித் ஷாவை சந்திக்கவிருப்பதும் அரசியல் சூழ்நிலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

முன்னதாக, சிவசேனை கட்சியின் ஒரு தரப்பினர் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் பாஜகவுடன் இணைந்து மகாராஷ்டிரத்தில் புதிய ஆட்சியை அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com