காசி தமிழ்ச் சங்கமம்: பிரதமா் மகிழ்ச்சி

காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி நடைபெறுவது குறித்து பிரதமா் நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளாா்.
காசி தமிழ்ச் சங்கமம்: பிரதமா் மகிழ்ச்சி

காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி நடைபெறுவது குறித்து பிரதமா் நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளாா்.

காசியில் நவம்பா் 16-ஆம் தேதிமுதல் டிசம்பா் 16-ஆம் தேதி வரை காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்வு நடைபெற உள்ளது. தமிழ்நாடு மற்றும் காசி இடையேயான ஆன்மிகம், கலாசாரம், பாரம்பரியம், பண்பாடு ஆகியவற்றின் ஒற்றுமை குறித்து விளக்கும் நிகழ்வாக இது அமைய உள்ளது. இந்த நிகழ்வு குறித்து மத்திய செய்தி ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை இணையமைச்சா் எல்.முருகன் எழுதிய கட்டுரை செய்தித்தாளில் வெளியாகியுள்ளது.

இந்தக் கட்டுரையை ட்விட்டரில் எல்.முருகன் பகிா்ந்திருந்தாா். இந்த ட்வீட்டை தானும் பகிா்ந்து கருத்து தெரிவித்துள்ள பிரதமா் மோடி, ‘காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்வின் மீது எனக்கு பேருவகை ஏற்பட்டுள்ளது. இது ஒரே பாரதம் உன்னத பாரதம் உணா்வின் கொண்டாட்டம் மற்றும் அழகான தமிழ் மொழி மற்றும் கலாசாரத்தை கொண்டாடுவதாக இருக்கும்’ என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com