ட்விட்டர் 'ப்ளூ டிக்' கணக்குகளுக்கு மாதம் ரூ.719 கட்டணம்: இந்தியாவில் அமலுக்கு வந்தது!

ட்விட்டர் பயனர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்தும் வகையில், அதிகாரப்பூர்வ கணக்குகளுக்கான 'ப்ளூ டிக்' வசதிக்கு மாதந்தோறும் ரூ.719 கட்டணத்தில் பயன்படுத்தும் சேவை இந்தியாவில் அமலுக்கு வந்துள்ளது. 
ட்விட்டர் 'ப்ளூ டிக்' கணக்குகளுக்கு மாதம் ரூ.719 கட்டணம்: இந்தியாவில் அமலுக்கு வந்தது!


ட்விட்டர் பயனர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்தும் வகையில், அதிகாரப்பூர்வ கணக்குகளுக்கான 'ப்ளூ டிக்' வசதிக்கு மாதந்தோறும் ரூ.719 கட்டணத்தில் பயன்படுத்தும் சேவை இந்தியாவில் அமலுக்கு வந்துள்ளது. 

பிரபல சமூக வலைத்தள நிறுவனமான ட்விட்டரை தொழிலதிபர் எலான் மஸ்க் வாங்கியதிலிருந்து பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறார். 

அதன் ஒரு பகுதியாக ட்விட்டர் பயனர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்தும் வகையில், பிரபலங்கள் வைத்திருக்கும் அதிகாரப்பூர்வ கணக்குகளுக்கான நீல நிற டிக்கிற்கு (ப்ளூ டிக்) வசதிக்கு மாதந்தோறும் ரூ.1,600 வசூலிக்க ட்விட்டர் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியான நிலையில், இனி மாதம் ரூ.640 (8 டாலர்) கட்டணம் செலுத்த வேண்டும்.  

கட்டணம் செலுத்தி ப்ளூ டிக் பெறும் பயனர்களுக்கு பதில்கள், குறிப்புகள் மற்றும் தேடல்களில் முன்னுரிமை வழங்கப்படும். மேலும், அதிக நேரங்கள் கொண்ட விடியோ மற்றும் ஆடியோள் பதிவிடும் வசதியும், பாதி விளம்பரங்கள் மட்டும் இருக்கும் வசதியும் வழங்கப்படும். இந்த கட்டணம் ப்ளூ டிக் வாங்கும் நாடுகளை பொறுத்து ஒவ்வொரு நாட்டிற்கும் ஏற்றவாறு கட்டணம் மாறுபடும். 

இந்த கட்டணம் மூலம் பெறப்படும் வருமானத்தால், சிறந்த உள்ளடக்கத்தை உருவாக்குபவர்களுக்கு வெகுமதியாக பகிர்ந்து அளிக்கப்படும் என ட்விட்டர் உரிமையாளர் எலோன் மஸ்க் தெரிவித்திருந்தார்.

இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். 

இந்த நிலையில் புதன்கிழமை முதல் அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் சில நாடுகளில் உள்ள பயனர்களுக்கு  'ப்ளூ டிக்' வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில்,  இந்தியாவில் ட்விட்டர் பயனர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்தும் வகையில், அதிகாரப்பூர்வ கணக்குகளுக்கான 'ப்ளூ டிக்' வசதிக்கு மாதந்தோறும் ரூ.719 கட்டணத்தில் பயன்படுத்தும் சேவை அமலுக்கு வந்துள்ளது. 

கட்டணம் செலுத்துவோர், விடியோ, ஆடியோ போன்றவற்றை கூடுதல் நேரத்திற்கு பதிவு செய்து கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

'ப்ளூ டிக்' வசதியை தற்போது பணம் கொடுத்து பெறும் வசதி உள்ளதால், இதனை சிலர் தவறாக பயன்படுத்தக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

இதற்கு பதிலளிக்கும் விதமாக, யாராவது ட்விட்டர் தளத்தை தவறாகப் பயன்படுத்துவது உறுதி செய்யப்பட்டால் அவர்கள் தங்களின் பணத்தை இழக்க நேரிடுவதுடன் அவர்களின் கணக்குகள் நிரந்தரமாக முடக்கப்படும் என எலான் மஸ்க்  எச்சரிக்கை விடுத்துள்ளார். 

இந்தியாவில் ட்விட்டரின்  'ப்ளூ டிக்' வசதி சலுகையின் ஸ்கிரீன் ஷாட்களை பலர் பகிர்ந்துள்ளனர். அமெரிக்காவை விட இந்தியாவில் 'ப்ளூ டிக்' வசதி சலுகை விலை அதிகமாகவே உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com