குஜராத் வாக்காளர்கள் வரும் தேர்தலில் பாஜகவுக்கு பாடம் புகட்டுவார்கள்: ராஜஸ்தான் முதல்வர்

குஜராத் வாக்காளர்கள் வரும் தேர்தலில் பாஜகவுக்கு பாடம் புகட்டுவார்கள் என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.
குஜராத் வாக்காளர்கள் வரும் தேர்தலில் பாஜகவுக்கு பாடம் புகட்டுவார்கள்: ராஜஸ்தான் முதல்வர்

குஜராத் வாக்காளர்கள் வரும் தேர்தலில் பாஜகவுக்கு பாடம் புகட்டுவார்கள் என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது, குஜராத்தில் மக்கள் மத்தியில் மிகுந்த அச்சம் நிலவுகிறது. மாநிலத்தில் ஆட்சிக்கு எதிரான மிகப்பெரிய அலை வீசுகிறது, அது இந்த தேர்தல் முடிவுகளில் தெரியும். மாநில மக்கள் வேலையின்மை மற்றும் பணவீக்கத்தால் சோர்ந்து போயுள்ளனர்.

அங்கு குஜராத் மாடல் இல்லை. அது மோடியின் மாடல். தற்போது அது முழுமையாக அம்பலமாகியுள்ளது. வரும் தேர்தலில் மக்கள் அவர்களுக்கு பாடம் புகட்டுவார்கள். ஹிமாசலப் பிரதேசத்திலும் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரும். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

குஜராத்தில் 182 இடங்களுக்கான சட்டப்பேரவைத் தோ்தல் டிச. 1, 5-ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த மாநிலத்தில் 27 ஆண்டுகளாக பாஜக ஆட்சியில் உள்ளது. இந்த முறை குஜராத் தேர்தலில் பாஜக, காங்கிரஸுடன், ஆம் ஆத்மியும் களம் காண்கிறது.

முன்னதாக குஜராத் சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை ராஜஸ்தான் முதல்வரும், தோ்தலுக்கான மூத்த காங்கிரஸ் பாா்வையாளருமான அசோக் கெலாட் நேற்று வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com