
முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு பிறந்த நாளையொட்டி, அவரது நினைவிடத்தில் சாந்தி வனத்தில் மலர்தூவி மரியாதை செலுத்திய ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி.
முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு பிறந்த நாளையொட்டி, காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே, ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் அவரது நினைவிடத்தில் சாந்தி வனத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக பதவியேற்றவர் ஜவஹர்லால் நேரு. அவர் குழந்தைகள் மீது அதிகம் பாசம் கொண்டவராக இருந்ததால், குழந்தைகள் அவரை நேரு மாமா என்று செல்லமாக அழைத்து வந்தனர். அதனால் அவரது பிறந்த நாளான நவம்பர் 14 ஆம் தேதி நாடு முழுவதும் குழந்தைகள் நாளாக ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன்படி, இன்று திங்கள்கிழமை(நவ.14) முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 134 ஆவது பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது.
இதனையொட்டி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, முன்னாள் காங்கிரஸ் தலைவரும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவருமான சோனியா காந்தி, பொதுச் செயலர் கே.சி.வேணுகோபால் உள்ளிட்டோர் தில்லியில் உள்ள நேருவின் நினைவிடமான சாந்தி வேனில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு பிறந்த நாளையொட்டி, அவரது நினைவிடத்தில் சாந்தி வனத்தில் மலர்தூவி மரியாதை செலுத்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே
Pandit Nehru — the maker of modern India.
— Mallikarjun Kharge (@kharge) November 14, 2022
21st India cannot be imagined without his tremendous contribution.
A champion of Democracy, his progressive thoughts furthered India’s social,political & economic development, despite the challenges.
My humble homage to a true patriot. pic.twitter.com/JTltZPrJWo
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூனே கார்கே தனது ட்விட்டர் பக்க பதிவில், நவீன இந்தியாவை உருவாக்கியவர் பண்டிட் நேரு. அவரது மகத்தான பங்களிப்பு இல்லாமல் 21 ஆவது இந்தியாவை நினைத்துக்கூட பார்க்க முடியாது.
ஜனநாயகத்தின் வெற்றியாளரான அவரது முற்போக்கான சிந்தனைகள் சவால்களுக்கு மத்தியிலும் இந்தியாவின் சமூக, அரசியல் மற்றும் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த வழிவகுத்தது. உண்மையான தேசபக்தருக்கு எனது பணிவான வணக்கம் என்று கூறியுள்ளார்.