
மகாராஷ்டிரத்தில் தனது நடைப்பணத்தின்போது ராகுல்காந்தி கலாம்நூரி கலாசார விழாவில் டிரம் வாசித்து அசத்தினார்.
மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிராக மக்களை ஒன்றுதிரட்டும் நோக்கில் ‘பாரத் ஜோடோ’ நடைப்பயணத்தை காங்கிரஸ் நடத்தி வருகிறது. அக்கட்சி எம்.பி. ராகுல் காந்தி நடைப்பயணத்தை முன்னின்று நடத்தி, செல்லும் இடங்களில் மக்களைச் சந்தித்து வருகிறாா்.
தமிழகத்தில் செப்டம்பர் 7ஆம் தொடங்கிய நடைப்பயணம் கேரளம், கர்நாடகம், ஆந்திரம், தெலங்கானாவை கடந்து தற்போது மகாராஷ்டிரத்தில் நடைபெற்று வருகின்றது.
இதையும் படிக்க- பஞ்சாப்பில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.1 ஆகப் பதிவு!
ராகுல் காந்தியின் நடைப்பயணம் நேற்று 66ஆவது நாளை எட்டியது. மகாராஷ்டிர மாநிலத்தில் மட்டும் அவர், 5 மாவட்டங்களில் உள்ள 15 சட்டப்பேரவை மற்றும் 6 நாடாளுமன்றத் தொகுதிகளில் 382 கிலோமீட்டர் தூரம் நடைப்பயணம் மேற்கொள்கிறார்.
இந்த நிலையில் ராகுல்காந்தி நேற்று தனது நடைப்பணத்தின்போது ஹிங்கோலி மாவட்டத்தில் உள்ள கலாம்நூரியில் நடைபெற்ற கலாசார விழாவில் இளைஞர்களுடன் இணைந்து டிரம் வாசித்து அசத்தினார். இது அங்கு கூடியிருந்த காங்கிரஸ் தொண்டர்களை உற்சாகப்படுத்தியது.