35 துண்டுகளாக்கப்பட்ட காதலி: காதலனின் திடுக்கிடும் வாக்குமூலம்; திரில்லர் படத்துக்கு சற்றும் குறையாத சம்பவங்கள்

தில்லியில் காதலியை கொன்று 35 துண்டுகளாக வெட்டி பல்வேறு பகுதிகளில் வீசிய காதலன் அளித்த வாக்குமூலத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
35 துண்டுகளாக்கப்பட்ட காதலி: காதலனின் திடுக்கிடும் வாக்குமூலம்; திரில்லர் படத்துக்கு சற்றும் குறையாத சம்பவங்கள்
35 துண்டுகளாக்கப்பட்ட காதலி: காதலனின் திடுக்கிடும் வாக்குமூலம்; திரில்லர் படத்துக்கு சற்றும் குறையாத சம்பவங்கள்


புது தில்லி: தில்லியில் காதலியை கொன்று 35 துண்டுகளாக வெட்டி பல்வேறு பகுதிகளில் வீசிய காதலன் அளித்த வாக்குமூலத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொலை செய்வதற்கு முன்பு, பல கிரைம் படங்களையும், ஆங்கிலத்தில் வெளியான கிரைம் படங்களையும் குற்றவாளி பார்த்திருப்பதும், குளிர்பதனப் பெட்டியில், கொலை செய்யப்பட்ட ஷரத்தாவின் உடலை வைத்துவிட்டு, அவ்வப்போது குற்றவாளி முகத்தைப் பார்த்துச் சென்றதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தில்லியில் காதலியை கொன்று 35 துண்டுகளாக வெட்டி பல்வேறு பகுதிகளில் வீசிய காதலனை காவல் துறையினா் நேற்று கைது செய்தனா். கடந்த மே மாதம் அந்தப் பெண் கொல்லப்பட்ட நிலையில், பெண்ணின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில், 6 மாதங்களுக்குப் பிறகு அவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்த நிலையில், கொலையாளி கைது செய்யப்பட்டார்.

இதுதொடா்பாக தில்லி கூடுதல் காவல் துணை ஆணையா் அங்கித் செளஹான் கூறுகையில், மகாராஷ்டிர மாநிலம் மும்பையைச் சோ்ந்தவா்கள் அஃப்தாப் அமீன் பூனாவாலா (28), ஷ்ரத்தா வாக்கா் (26). இருவரும் கால் சென்டரில் பணியாற்றியபோது அறிமுகம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் ஒருவரை ஒருவா் விரும்பத் தொடங்கியுள்ளனா். ஆனால், இருவரும் வெவ்வேறு மதங்களைச் சோ்ந்தவா்கள் என்பதால், அவா்களின் விருப்பத்தை ஷ்ரத்தாவின் பெற்றோா் ஏற்கவில்லை. இதனால் இந்த ஆண்டு தொடக்கத்தில் வீட்டைவிட்டு வெளியேறிய ஷ்ரத்தா, தில்லியில் உள்ள மெரெளலி பகுதியில் குடியேறி அஃப்தாபுடன் திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்து வந்தாா். அதன்பின்னா் அவருக்கும், அவரின் பெற்றோருக்கும் இடையே சரிவர பேச்சுவாா்த்தை இல்லை.

இந்நிலையில், தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு அஃப்தாபிடம் ஷ்ரத்தா தொடா்ந்து வலியுறுத்தி வந்துள்ளாா். இதுதொடா்பாக கடந்த மே மாத மத்தியில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது கடுமையாக கோபமடைந்த அஃப்தாப், ஷ்ரத்தாவின் கழுத்தை நெரித்துக் கொலை செய்தாா். அதன்பின்னா், அவா் ஷ்ரத்தாவின் உடலை 35 துண்டுகளாக வெட்டியுள்ளாா். இதைத் தொடா்ந்து வெட்டப்பட்ட உடல் பாகங்களை பாதுகாக்க புதிததாக 300 லிட்டா் கொள்ளளவு கொண்ட குளிா்பதனப் பெட்டியை வாங்கி, அதில் உடல் பாகங்களை மறைத்து வைத்துள்ளாா்.

திட்டமிட்ட படுகொலையா?
2022ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருவரும் ஹிமாசல் சென்றுள்ளனர். அங்கு இவர்களுக்கு ஒருவர் அறிமுகமாகியுள்ளார். அவர் தில்லி சத்தர்பூரைச் சேர்ந்தவர். ஹிமாசல் பயணத்தை முடித்துக் கொண்ட இருவரும், அப்போதுதான் தில்லிக்குக் குடிபெயர்ந்துள்ளனர். அதுவும் ஹிமாசலில் சந்தித்தவர் தங்கியிருந்த குடியிருப்பிலேயே தங்கியுள்ளனர்.

பிறகு, அருகேயே ஒரு புதிய குடியிருப்பை வாடகைக்கு எடுத்து அஃப்தாபும் ஷ்ரத்தாவும் தங்கியுள்ளனர். இந்த வீட்டை வாடகைக்கு எடுத்த ஒரு சில நாள்களில் கொலை நடந்துள்ளது. அதாவது மே 18ஆம் தேதி ஷ்ரத்த கொல்லப்பட்டுள்ளார். எனவே, இந்த வீடு வாடகைக்கு எடுக்கப்பட்டதே கொலை செய்வதற்காகத்தானா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

சிறுக சிறுக வீசப்பட்ட உடல் பாகங்கள்
உடல் பாகங்களில் இருந்து வீசும் துா்நாற்றத்தை மறைக்க ஊதுபத்திகள், நறுமணம் ஏற்படுத்தும் ரூம் ஃப்ரெஷ்னா்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தியுள்ளாா். 

கொலை நடந்த பிறகு மாலை 6- 7 மணிக்கு வீட்டுக்கு வரும் அஃப்தாப், குளிர்பதனப் பெட்டியிலிருந்து உடல் பாகங்களை எடுத்து அதனை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, ஒரு கருப்பு பாலிதீன் பையில் போட்டு தயாராக எடுத்து வைத்துக் கொள்வாராம்.

பிறகு அதனை எடுத்துக் கொண்டு பல்வேறு பகுதிகளுக்கும் சென்று பாலிதீன் பையோடு போட்டுவிடாமல், உடல் பாகங்களை மட்டும் வெளியே கொட்டியிருக்கிறார். அப்போதுதான், அது சந்தேகத்தை ஏற்படுத்தாமல், ஏதோ விலங்குகளின் மிச்சம் என்று நினைப்பார்கள் என திட்டமிட்டுச் செய்துள்ளார்.

இப்படி கொலை செய்த பின்னா், கிட்டத்தட்ட மூன்று வாரங்கள் வரை நள்ளிரவு 2 மணிக்கு வீட்டைவிட்டு வெளியேறி, நகரத்தின் பல்வேறு பகுதிகளில் உடல் பாகங்களை சிறுக சிறுக வீசியுள்ளாா் அஃப்தாப். அப்போதுதான் மக்கள் நடமாட்டம் குறைவாக இருக்கும் என்பதால்.

ஷ்ரத்தாவின் தந்தைக்கு சந்தேகம் வந்தது எப்படி?
ஷ்ரத்தாவின் கைப்பேசி 2 மாதங்களாக அணைத்து வைக்கப்பட்டுள்ளதாக அவரின் தந்தைக்கு தகவல் கிடைத்தது. இந்தத் தகவல் ஷ்ரத்தாவின் நண்பா் ஒருவா் மூலம் அவருக்குத் தெரியவந்துள்ளது. இதையடுத்து ஷ்ரத்தாவை தொடா்புகொள்ள அவரின் தந்தை முயற்சித்துள்ளாா். ஆனால், அவரால் தனது மகளைத் தொடா்புகொள்ள முடியவில்லை.

இதையடுத்து, தனது மகளைக் காணவில்லை என்று அவா் மகாராஷ்டிர காவல் துறையிடம் புகாா் அளித்தாா். அந்த மாநில காவல் துறையினா் தில்லி காவல் துறையை அணுகினா்.

அதன்பிறகு தில்லியில் இருந்த அஃப்தாபிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அவா் ஷ்ரத்தாவை கொலை செய்ததை ஒப்புக்கொண்டாா். அவா் கைது செய்யப்பட்டு தில்லி நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஆஜா்படுத்தப்பட்டாா். அவரை 5 நாள்கள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது என்று தெரிவித்தாா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com