சாவர்க்கர் தொடர்பாக ராகுல் கருத்து: உடன்பட மறுத்த சிவசேனை

சாவர்க்கர் தொடர்பான ராகுல்காந்தியின் கருத்துடன் தாங்கள் உடன்படவில்லை என மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சாவர்க்கர் தொடர்பான ராகுல்காந்தியின் கருத்துடன் தாங்கள் உடன்படவில்லை என மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

பாஜக அரசின் நடவடிக்கைகளை எதிர்த்து காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஒற்றுமை யாத்திரையில் ராகுல்காந்தி ஈடுபட்டுள்ளார். 

செப்டம்பர் 7ஆம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த யாத்திரையில் ராகுல்காந்தியுடன் பல்வேறு தலைவர்களும் கலந்து கொண்டுள்ளனர். இந்த யாத்திரை தமிழ்நாடு, கேரளம், தெலங்கானா, கர்நாடகம் மாநிலங்களைக் கடந்து தற்போது மகாராஷ்டிரத்தில் நடைபெற்றுக் கொண்டுள்ளது. 

இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தில் நடைபெற்ற இந்திய ஒற்றுமை பயண பொதுக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை உறுப்பினருமான ராகுல்காந்தி பாஜகவை கடுமையாக விமர்சித்தார். மேலும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் முன்னோடி தலைவராக இருந்த சாவர்க்கர் குறித்து விமர்சித்ததுடன் அவர் ஆங்கிலேயர்களிடமிருந்து கருணைத் தொகை பெற்றதாக குற்றம்சாட்டினார். 

இந்நிலையில் ராகுல்காந்தியின் இந்த கருத்துக்கு கூட்டணி கட்சியான உத்தவ் தாக்கரே ஆதரவு சிவசேனை மறுப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பேசிய அக்கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே, “சாவர்க்கர் குறித்த ராகுல்காந்தியின் கருத்துக்கு நாங்கள் உடன்படவில்லை. நாங்கள் சாவர்க்கரை நேசிக்கிறோம். அவரை மதிக்கிறோம்.

அதேசமயம் சுதந்திரப் போராட்டத்தில் ஆர்எஸ்எஸ் செய்த பணி என்ன என்பதை பாஜகவினர் விளக்க வேண்டும். நாங்கள் அப்போது இல்லை. ஆனால் ஆர்எஸ்எஸ் இருந்தது. அந்த அமைப்பு சுதந்திரப் போராட்டத்தில் ஒரு பங்கையும் வகிக்கவில்லை” எனத் தெரிவித்தார். 

காங்கிரஸ் கட்சியின் ஒற்றுமை யாத்திரைக்கு உத்தவ் தாக்கரே ஆதரவு சிவசேனை கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com