

அகமதாபாத்தில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த நவஜீவன் விரைவு ரயில் ஆந்திரம் அருகே திடீரென தீ விபத்துக்குள்ளானது. அதிகாரிகளின் துரித நடவடிக்கையால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
அகமதாபாத்தில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த நவஜீவன் விரைவு ரயில் வியாழக்கிழமை இரவு ஆந்திரம் மாநிலம் கூடூர் அருகே வந்துகொண்டிருந்த போது ரயிலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் ரயிலில் பயணம் செய்து பயணிகளிடையே பதற்றம் நிலவியது. உடனடியாக ரயில்வே அதிகாரிகள் கூடூர் சந்திப்பில் ரயிலை நிறுத்தி, தீயை அணைத்து பெரும் விபத்தைத் தடுத்தனர்.
இதையும் படிக்க | ராஜஸ்தான்: ரயில் தண்டவாள குண்டுவெடிப்பில் 4 போ் கைது
நவஜீவன் விரைவு ரயில் கூடூர் ரயில் நிலையத்தில் சுமார் ஒரு மணி நேரம் நிறுத்தப்பட்டது.
அதிகாரிகள் கவனத்துடன் துரிதமாக செயல்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.